வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்றுள்ள கமலா ஹாரிஸ் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது எதிர்பார்ப்பைத் தூண்டி விட்டுள்ளது.
அமரிக்க துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் இன்னும் 72 நாளில் அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெறுவார் என்று ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது பின்னர் அப்படியே மங்கிப் போய் விட்டது. தேர்தலில் கமலா ஹாரிஸ் தோல்வியுற்றார்.
தான் தேர்தலில் தோல்வியுற்றதை ஏற்றுக் கொள்வதாக கூறிய கமலா ஹாரிஸ், ஆனால் வீழ்ந்து போக மாட்டேன். தொடர்ந்து போராடுவேன் என்று கூறியிருந்தார். இதனால் அவரது எதிர்கால திட்டம் என்ன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அனேகமாக அவர் 2028 அதிபர் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருப்பதாக ஒரு கருத்து உலா வருகிறது. சற்று அவகாசம் எடுத்துக் கொண்டு 2028 தேர்தலில் போட்டியிட அவர் ஆயத்தமாவார் என்று கூறப்படுகிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற உதாரணங்கள் உள்ளன. அதாவது ஜான் கெர்ரி, 2004 தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் ஜார்ஜ் புஷ்ஷிடம் தோல்வியடைந்தார். இருந்தாலும் அவர் அப்படியே ஓய்ந்து போய் விடவில்லை. மாறாக, பின்னர் வந்த பராக் ஒபாமாவின் 2வது ஆட்சிக்காலத்தில் ஜான் கெர்ரி வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற ஜான் கெர்ரி செனட் உறுப்பினராக வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தார். அதேபோல கமலா ஹாரிஸும் செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால் ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே கமலா ஹாரிஸுக்கு எதிர்ப்பும் இருப்பதால் இதெல்லாம் சுலபமானதாக தெரியவில்லை.
கமலா ஹாரிஸின் உடனடித் திட்டம் ஒரு சுய சரிதை எழுதுவதாக இருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். இதற்கு முன்பு டொனால்ட் டிரம்ப்பிடம் 2016 தேர்தலில் தோல்வியுற்ற ஹில்லாரி கிளிண்டன் ஒரு புத்தகம் எழுதினார். அதேபோல அல் கோரும் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் ஒரு புத்தகம் எழுதினார். கமலாவும் எழுதுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கமலாவின் அடுத்தடுத்த திட்டங்கள் என்னவாக இருக்கும் என்பதை 72 நாட்கள் கழித்தே நாம் அறிய முடியும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனி அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: டாக்டர் ராமதாஸ் போட்ட கண்டிஷன்!
புதுச்சேரி துணை நிலை ஆளுநருடன் மோதல்.. சமாதானமானார் முதல்வர் என். ரங்கசாமி!
மதுரையில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: டாக்டர் அன்புமணி
பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா.. 29 தெலுங்கு நடிகர், நடிகைகள் மீது வழக்கு
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
தமிழக வெற்றிக் கழகம் என்று படகுகளில் எழுதினால் மானியம் மறுப்பதா.. விஜய் கண்டனம்
அதிமுகவை மீட்க முடியாதவர் பழனிச்சாமி தமிழகத்தை மீட்பேன் என்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள்... எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்து வருகிறார்: அமைச்சர் சேகர்பாபு
புதுப் புது வரலாறு படைக்கக் காத்திருக்கும் சுப்மன் கில்.. 4 உலக சாதனைகளுக்கு ஆபத்து!
{{comments.comment}}