- மஞ்சுளா தேவி
சென்னை: சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை உலுக்கி எடுத்து வரும் கன மழையை ஏற்படுத்தியுள்ள மிச்சாங் புயலானது தற்போது வடக்கில் நகர்கிறது. இருப்பினும் இன்று இரவு வரை சென்னைக்கு கன மழை உண்டு. அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை வானிலை மையம் விளக்கியுள்ளது.
சென்னையை பொருத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிச்சாங் புயல் சென்னைக்கு கிழக்குத் தென்கிழக்கில் 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது தீவிர புயலாக வலுவடைந்து, தொடர்ந்து வட தமிழ்நாடு தெற்கு ஆந்திரா கரையை ஒட்டி நகரும். பின்பு ஆந்திராவின் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே, பபட்லா என்ற இடத்தில் நாளை முற்பகல் கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும் போது அதி தீவிரமான புயலா கரையைக் கடக்கும் என்பதால் சேதம் மிகப் பெரிதாகவே இருக்கும்.

புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 90 முதல் 100 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீச கூடும். காலையில் 10 கிமீ வேகத்தில் புயல் நகர்ந்த நிலையில், தற்போது 8 கிலோமீட்டர் என்ற அளவுக்கு குறைந்து நகர்ந்து வருகிறது. புயலின் நகரும் வேகம் குறைந்ததால்தான் சென்னை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர், மாவட்டங்களில் கன மழை தொடர்கிறது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}