சென்னை டூ தூத்துக்குடி.. பல தொகுதிகளில் சரிந்த வாக்குப் பதிவு.. இதுதான் காரணமா?

Apr 20, 2024,05:07 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 39 தொகுதிக்கான லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில்,பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் வாக்கு சதவீதம் பெருமளவில் சரிந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுந்து வருகின்றன.


தமிழ்நாட்டில் 39 தொகுதிக்கான வாக்கு பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் நடிகர் நடிகைகள், பொதுமக்கள், என அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்குப்பதிவு செய்தனர். முதலில் காலை நிலவரப்படி வாக்குபதிவுகள் மந்தமாக நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து மதிய வேளைகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.இதன்படி தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 




இந்த வாக்குப்பதிவில் முற்றிலும் ஊரகப் பகுதியான கள்ளக்குறிச்சி அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. முற்றிலும் நகர்ப்புறமான மத்திய சென்னை தமிழ்நாட்டிலேயே மிகக் குறைந்த வாக்குகளை பெற்று கடைசி இடத்தை  பிடித்துள்ளது. 


சென்னையை பொறுத்தவரை, தென் சென்னையில் 54.27 சதவீதமும், மத்திய சென்னையில் 53.91சதவீதமும், வடசென்னையில் 60.13 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. தூத்துக்குடியில் 59.96 சதவீத என்ற மிகக் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


கடந்த 2019 தேர்தலை விட  இந்த தேர்தலில் சென்னையில் 10% வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளதாக நேற்று அறிவித்திருந்த நிலையில் தற்போது சென்னை மற்றும் தூத்துக்குடியில் குறைந்த அளவு வாக்குகளை பதிவாகியுள்ளன. இதற்கு காரணம் என்ன என்று பலரும் விவாதித்து வருகின்றனர்.


கடந்த ஆண்டு சென்னை மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் பெய்த பேய் மழை அப்பகுதியை புரட்டி போட்டு விட்டது. இந்த வெள்ளம் காரணமாக பெருத்த சேதம் ஏற்பட்டது. இதனால் மக்கள் வீடுகளை இழந்து.. உடமைகளை இழந்து செய்வதறியாமல் கடுமையான பாதிப்படைந்தனர்.  குறிப்பாக தூத்துக்குடி பெரும் சேதத்தை சந்தித்தது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் அசுர வேகத்தில் நிவாரணப் பணிகள் மேற்கொண்டது. இருந்தும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தண்ணீர் வடியாமல் மக்கள் மீண்டு வர பல நாட்கள் ஆனது.


வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு மத்திய அரசு நிவாரண உதவியைத் தரவில்லை என்ற ஏமாற்றமும், குற்றச்சாட்டும் இந்தத் தேர்தலில் பெரிதாக எதிரொலித்தது. மக்களுக்கு இதனால் அதிருப்தி ஏற்பட்டு விரக்தியில் பலரும் ஓட்டுப் போட வரவில்லை என்று பொதுவாக கருதப்படுகிறது.  வெள்ள நிவாரண உதவிகள் சரியாக போய்ச் சேராமல் மக்கள் அதிருப்தி அடைந்தனரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று தெரியவில்லை.




அதேசமயம் பலரத் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் போனதும் கூட ஒரு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. சென்னையில்  நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை, ஆனால் அவரது மனைவி பெயர் இருந்தது. அதேபோல சைதாப்பேட்டை பகுதியில் 500 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. இதெல்லாமும் கூட ஒரு காரணம். வார இறுதியில் தேர்தலை வைத்ததால் பலரும் தேர்தலில் ஆர்வம்  காட்டாமல் வெளியூர்களுக்குப் போய் விட்டதாகவும், டூர் போய் விட்டதாகவும் இன்னொரு காரணம் கூறப்படுகிறது. அதேபோல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போர் பெருமளவில் வாக்களிக்கவில்லை என்ற பேச்சும் அடிபடுகிறது.


வரும் காலத்தில் தேர்தல் ஆணையம் ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட்டு மக்களை வாக்களிக்க வைப்பதில் ஆர்வத்தைத் தூண்டினால் மட்டுமே எதிர்காலத்தில் தேர்தல்களில் அதிக அளவிலான வாக்குப்பதிவு நடைபெறும். இதற்காக தேர்தல் சட்டங்களிலும் கூட தேவையான சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்