டில்லி : இந்தியாவில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சாமானிய மக்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தங்கம் விலை அதிரடியாக வருகிறது. இதனால் இதற்கு ஒரு முடிவே இல்லையா? எப்போது தான் தங்கம் விலை குறையும் என மக்கள் புலம்பி வருகிறார்கள்.
ஆனால், "இதுக்கே அசந்துட்டா எப்புடி...இனிமே தான மெயின் பிக்சர், தரமான சம்பவம் எல்லாம் காத்திருக்கு" என சொல்வது போல பேரதிர்ச்சி தரும் கணிப்பு ஒன்றை சந்தை நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர். இதை கேட்டது முதல் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
இன்றைய நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் விலை ரூ.52,000 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.6500 ஆக உள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் இதே நிலை தான். குறைந்த விலையில், தரமான தங்கத்தை வாங்க ஏற்ற நாடுகளாக சொல்லப்படும் துபாய், ஹாங்காய், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இதே நிலை தான். சர்வதேச சந்தையில் பெரும்பாலான நாடுகளின் நாணய மதிப்பு குறைந்து வருவதே தங்கம் விலை உயர்விற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

அது மட்டுமல்ல இன்றைய தேதியில் உலக அளவில் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் என சொல்லப்படுகிறது. பாதுகாப்பான முதலீட்டிற்கு சரியான தேர்வு என்பதால் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதும் தங்கம் விலை உயர்விற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இப்படி உயர்ந்து கொண்டே போகிறதே இந்த தங்கம் விலை எப்போது தான் குறையும்? என கேட்டால், அதற்கு நிபுணர்களிடம் இருந்து வரும் ஒரே பதில், "வாய்ப்பில்லை ராஜா" என்பது தான். ஆமாங்க. இப்போது மட்டுமல்ல இன்னும் 10 ஆண்டுகளுக்கு தங்கம் விலை உயருமே தவிர, குறைய வாய்ப்பு இல்லை என நிபுணர்கள் அதிர்ச்சி பதிலை தான் சொல்கிறார்கள்.
சந்தை நிபுணர்கள் வெளியிட்டுள்ள கணிப்பின் படி, 2024 ம் ஆண்டு முழுவதுமே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கும். அதுவும் செப்டம்பர் மாதத்தில் அதிரடியாக உயரும். 2025 ம் ஆண்டில் 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.92,739 ஆக இருக்கும். 2025 ம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்பே ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை தாண்டி விடும். 2030 ம் ஆண்டில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1.50 லட்சத்தை நெருங்கி இருக்கும். இனி வரும் காலங்களில் உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதால், அது கண்டிப்பாக தங்கத்தின் விலையில் எதிரொலிக்கும் என சொல்லப்படுகிறது. 2024 ம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு சவரன் தங்கத்தின் விலை இந்தியாவில் ரூ.72,000 ஐ தொட்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}