GOAT Whistle Podu: பார்ட்டி ஒன்று தொடங்கட்டுமா.. காம்பெய்னத்தான் தொறக்கட்டுமா.. ஜஸ்ட் வெறித்தனம்!

Apr 14, 2024,05:35 PM IST
சென்னை: ஒரே பாட்டிலில் பல சரக்குகளை மிக்ஸ் செய்து செமத்தியான காக்டெய்லாக வந்துள்ளது தி கோட் முதல் பாடல்.

யுவன் ஷங்கர் ராஜா - விஜய் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளதால் நிலவி வரும் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு சற்றும் குறைவு வைக்காமல், பிரித்து மேய்ந்துள்ளது முதல் பாடல். விஜய் வாய்ஸ்.. ஆஹா.. சொக்க வைக்கிறது. முழுமையாக ரசித்துப் பாடியிருக்கிறார். இசையில் மிரட்டியிருக்கிறார் யுவன். மெலடியும், குத்தும் கலந்து மிரட்டலாக கொடுத்திருக்கிறார்.

பாட்டின் கடைசியில் வரும் அந்த டான்ஸ்.. பார்ப்போருக்கு கூஸ் பம்ப்ஸ் கன்பர்ம்ட்.. ஆனானப்பட்ட பிரபுதேவாவே திணறுவது போல தெரிகிறது..  அந்த அளவுக்கு மின்னல் வேகத்தில் கொளுத்தியிருக்கிறார் விஜய். வெறித்தனமான ஆட்டம்.. தியேட்டர் தலை கீழாக புரளப் போவது நிச்சயம்.

ராஜு சுந்தரத்தின் கொரியோகிராபி பிரமாதமாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது அதிரடியான டான்ஸை இதில் பார்க்க முடிகிறது. விஜய் மட்டும் இல்லை, பிரஷாந்த்தையும் பிரமாதமாக ஆட வைத்திருக்கிறார்கள்.. விஜய் ரசிகர்களுக்கு ஏற்ற செமத்தியான விருந்து இது என்று தாராளமாக சொல்லலாம். ரசிகர்கள் பட்டி தொட்டியெங்கும் அல்ரெடி கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.



சரி அதையெல்லாம் விடுங்க பாட்டுக்கு வருவோம்.. இது  விஜய் கட்சிக்கான பாட்டா அல்லது படத்தில் வரும் பார்ட்டிக்கான பாட்டா என்ற சந்தேகம் கண்டிப்பாக வரும்.. காரணம், ஆரம்ப வரிகளே அப்படித்தான் இருக்கிறது. ரசிகர்கள் சூப்பராக சூடு கிளப்ப வைத்திருக்கும் வரிகள்.. பாட்டின் வரிகளில், விஜய் கட்சியின் வரவேற்பையும் கலந்து கொடுத்திருக்கிறார் மதன் கார்க்கி.. அடுத்த தேர்தலில் அதகளப்படுத்தக் காத்திருக்கும் விஜய் ரசிர்களுக்கு சூப்பர் சூட்டைக் கிளப்பும் வகையில் பாட்டு வரிகள் இருக்கிறது.

வழக்கம் போல நிறைய அட்வைஸ்கள் இடம் பெற்றிருந்தாலும் சரி ரொம்ப ஓவர் டோஸாக இல்லாமல் ஜாலியான பாடலாகவும் இது அமைந்திருப்பது அனைவரையும் ரசிக்க வைப்பதாக உள்ளது. பாடல்  பார்ட்டி என்பதாலும், முழுக்க பாட்டில்களின் ரெபரன்ஸ் நிறைய கலந்திருப்பதாலும் நிச்சயம் இதற்கு எதிர்ப்பும், விமர்சனமும் வரவே செய்யும்.. இருந்தாலும் படத்தில் பாடலைப் பார்க்கும்போதுதான் அதைப் புரிந்து கொள்ள முடியும்.

அப்புறம் முக்கியமான விஷயம், பாட்டில் மங்காத்தா ரெபரன்ஸும் அப்படியே வந்து போகுது.. அதை மறக்காம பார்த்து ரசிங்க.

மொத்தத்தில், மொத்தப் பாட்டும் கும்முன்னு இருக்கு..  சில் பண்ணுங்க நீங்களும்  கேட்டு!

சமீபத்திய செய்திகள்

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்