விராட் கோலி, ரோஹித் சர்மா இல்லாமல் இங்கிலாந்து போகும் இந்திய அணி.. யாருக்கெல்லாம் வாய்ப்பு?

May 12, 2025,09:04 PM IST

மும்பை: ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்யும் ஆலோசனைகளில் இந்திய தேர்வுக் குழு இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருந்த நிலையில் ரோஹித் சர்மா தனது ஓய்வை அறிவித்தார். இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதட்டம் காரணமாக ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று விராட் கோலி தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் யாரெல்லாம் இடம்பெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய அணியில் இடம் பெறக் கூடிய வீரர்களாக சிலரது பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் குறித்த ஒரு பார்வை..




ஷர்துல் தாக்கூர் -  சமீபத்தில் நடந்து முடிந்த ரஞ்சி கோப்பைத் தொடரில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளுக்கான தேசிய அணியில் மீண்டும் இடம் பெறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அவரது பன்முகத் திறமை, குறிப்பாக வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்களில் அணிக்கு பக்க பலமாக இருக்கும்.


துருவ் ஜூரல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான விக்கெட் கீப்பர்களாக இருப்பார்கள். அதேசமயம், இஷான் கிஷன் பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டிருந்தாலும், அணியில் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லை.


ஷ்ரேயாஸ் ஐயர் பெயரும் தற்போது அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆரம்பத்தில் அவர் அணியின் திட்டத்தில் இல்லாவிட்டாலும், விராட் கோலியின் ஓய்வு, ஷ்ரேயாஸ் ஐயரின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. எனவே அவருக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடும்.


இளம் வீரர் சாய் சுதர்சன் இன்னொரு முக்கிய வீரராக பரிசீலனையில் உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அடித்து நொறுக்கி ரன்களைக் குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன். நான் தேர்வுக் குழுவில் இருந்தால் நிச்சயம் சாய் சுதர்சனை தேர்வு செய்வேன் என்று முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சுதர்சனை பாராட்டிக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மாவின் இடத்தை நிரப்பக்கூடிய தகுதியான வீரராக அவர் பலராலும் பார்க்கப்படுகிறார்.


முகேஷ் குமார் மற்றும் யாஷ் தயால் ஆகியோரும் அணியில் இடம் பெறக்கூடும், அதே நேரத்தில் கலீல் அகமது தனது வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும். முகமது ஷமியும் அணியில் இடம் பெறுவதும் தற்போது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

news

திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்

news

Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!

news

ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!

news

தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு

news

வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!

news

வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!

news

சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்