சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் கடந்த காலங்களை விட இந்த முறை அதிக அளவிலான நடிகைகளுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு அரசியல் களத்தில் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களின் தாக்கம் எப்போதுமே தூக்கலாகவே இருக்கும். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் முதல், நடிகர் விஜயகாந்த் வரை பலரும் அரசியலில் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர்.
வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சில நடிகைகள் அரசியல் களத்தில் நேரடியாகப் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனாலும் யாரெல்லாம் போட்டியிட வாய்ப்புண்டு, யாருக்கெல்லாம் சீட் கிடைக்க வாய்ப்பிருக்கு என்பது குறித்த ஊகங்கள் வெளியாகி வருகின்றன.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் மேல் உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தற்போதே வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தங்களின் கட்சியை வலுப்படுத்தும் விதமாக, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் பிரபலங்களை அரசியலில் இணைக்க முயற்சிப்பார்கள். இந்த வரிசையில், பிரபலமான நடிகைகள் சிலரின் பெயர்கள் அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்படுகின்றன.
தற்போதுள்ள தகவல்கள் மற்றும் ஊகங்களின் அடிப்படையில், சில நடிகைகள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் இணைந்து செயல்படுபவர்களாகவோ, அல்லது அரசியல் ஆர்வம் கொண்டவர்களாகவோ இருக்கலாம்.
குஷ்பு சுந்தர்
பா.ஜ.க.வில் இணைந்து தேசிய அளவில் செயலாற்றி வரும் குஷ்பு, தமிழக அரசியலில் ஒரு முக்கிய முகமாக அறியப்படுகிறார். அவர் ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார் குஷ்பு.
வரும் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியின் ஒரு பகுதியாக அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. அவரது திரை பிம்பமும், தமிழக மக்களின் மத்தியில் அவருக்குள்ள அறிமுகமும் அவருக்கு சாதகமாக அமையும். கடந்த தேர்தலிலேயே அவர் தனது கணவரின் ஊரான ஈரோட்டில் ஒரு தொகுதியைத்தான் கேட்டிருந்தார். ஆனால் அது கிடைக்கவில்லை. எனவே இந்த முறையாவது ஈரோடு பக்கம் அவருக்கு சீட் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கௌதமி
பா.ஜ.க.வில் இணைந்து செயல்பட்டு வந்த மற்றொரு நடிகை கௌதமி தற்போது அதிமுகவில் இருக்கிறார். கமலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பாஜகவில் இருந்தபோது அவர் ராஜபாளையம் சட்டசபைத் தொகுதியை எதிர்பார்த்தார். தொகுதிக்குப் போய் ஆம்புலன்ஸ் எல்லாம் ஓட்டி பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தார். ஆனால் சீட் கிடைக்கவில்லை.
இந்த அதிருப்தி மற்றும் பாஜகவைச் சேர்ந்த அழகப்பன் என்பவருடன் ஏற்பட்ட சொத்துப் பிரச்சினை காரணமாக பாஜகவை விட்டு விலக் அதிமுகவுக்கு வந்தார். வரும் தேர்தலில் அவரும் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜபாளையத்தில் அவர் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
நடிகை காயத்ரி ரகுராம்
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர் காயத்ரி ரகுராம், தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தியுள்ளார். அவரும் வருகிற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருக்கிறார். ஆனால் சீட் கிடைக்குமா என்றுதான் தெரியவில்லை. இருந்தாலும் திமுக தரப்புக்கு நெருக்கடியைக் கொடுக்க அவருக்கு சீட் கொடுக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன.
இவர்கள் தவிர வேறு இரு நடிகைகளின் பெயர்களும் தேர்தல் களத்தில் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதில் முக்கியமானவர் விஜயலட்சுமி. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடுமையாக போராடி வந்த, வீடியோக்கள் போட்டு பரபரப்பை ஏற்படுத்திய, அவரை காவல் நிலையம் வரை ஏற வைத்தவரான நடிகை விஜயலட்சுமிதான்.
இவரை சீமான் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக நிற்க வைக்கலாம் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. திமுக சார்பில் நேரடியாக நிறுத்தப்படாவிட்டாலும் கூட, அவரை மறைமுகமாக ஆதரித்து நிற்க வைத்து சீமானுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதேபோல வலதுசாரி ஆதரவாளரான நடிகை கஸ்தூரியும் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இருப்பினும் கட்சி சார்பில் அவர் போட்டியிடுவாரா என்று தெரியவில்லை.
நடிகர் விஜய், "தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இவரின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தனது கட்சிக்கு ஆதரவாகவும், வலுசேர்க்கும் விதமாகவும், சில நடிகைகளை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வைக்கலாம் என்ற யூகங்களும் நிலவுகின்றன. இருப்பினும், இது குறித்த தெளிவான தகவல்கள் தற்போது இல்லை. காரணம், இதுவரை எந்த ஒரு நடிகையும், அவரது கட்சியில் இணையவில்லை.
மேலே குறிப்பிட்ட நடிகைகளைத் தவிர, வேறு சில இளம் நடிகைகள் அல்லது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகள், சில அரசியல் கட்சிகளின் சார்பாக போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது. ஆனால், இது வெறும் ஊகங்களே.
சவால்களும் எதிர்பார்ப்புகளும்:
திரை நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டில் புதிதல்ல. ஆனால், வெற்றி பெறுவது என்பது அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு, மக்கள் தொடர்பு, அரசியல் பார்வை மற்றும் கட்சி ஆதரவைப் பொறுத்தது. அதே சமயம், அவர்கள் மீதான பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் அதிகம் இருக்கும்.
எந்தெந்த நடிகைகள் உண்மையில் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்பது, தேர்தல் அறிவிக்கப்பட்டு, கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிடும்போதுதான் முழுமையாகத் தெரியவரும். இருப்பினும், இந்த முறை சற்று அதிகமாகவே நடிகர் நடிகைகள் களம் காண வாய்ப்புள்ளது.
பாகிஸ்தானுக்கு பை பை சொல்கிறது மைக்ரோசாப்ட்.. ஊழியர்களைக் குறைத்து வந்த நிலையில் மூடு விழா!
அமெரிக்காவின் காலக்கெடுவுக்கு பிரதமர் மோடி பணிந்து போவார்.. ராகுல் காந்தி பேச்சு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு!
One Big and Beautiful bill.. வரி மற்றும் செலவு மசோதாவில் கையெழுத்திட்ட அதிபர் டிரம்ப்!
தேவசயனி ஏகாதசி.. சனிக்கிழமை இரவு தொடங்கி.. ஞாயிறு காலை முடியும்!
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. குஷ்பு, கெளதமி.. எந்தெந்த நடிகைகள் போட்டியிட சீட் கிடைக்கும்?
நிலையற்ற விலையில் தங்கம்... நேற்று குறைந்த தங்கம் விலை இன்று உயர்வு!
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்.. விஜய் வழி தனி வழி.. தெளிவா சொல்லிட்டாரு.. 4 முனைப் போட்டிதான்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 05, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிக்காரர்கள்
{{comments.comment}}