Modi 3.O: ஓபன் பண்ணா.. புது மினிஸ்டர்ஸ்.. தமிழ்நாட்டுக்கு சான்ஸ் உண்டா?.. பாஜகவின் வேற லெவல் பிளான்

Jun 07, 2024,10:06 PM IST

டெல்லி: பிரதமர் மோடியின் 3வது அமைச்சரவை வேற லெவலில் இருக்குமாம். புத்தம் புது ரத்தத்தைப் பாய்ச்சத் திட்டமிட்டுள்ளது பாஜக. பல அமைச்சர்கள் ஏற்கனே தேர்தலில் தோற்றுப் போய் விட்டனர். மிச்சம் இருப்பவர்களிலும் பலரைக் கழற்றி விட்டு விட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம்.


2வது மோடி அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களில் தேர்தலில் போட்டியிட்டவர்களில் 19 பேர் தோற்றுப் போய் விட்டனர். அவர்களில் முக்கியமானவர்கள்  - ராஜீவ் சந்திரசேகர், ஸ்மிருதி இராணி, ஆர்கே.சிங் ஆகியோர் முக்கியமானவர்கள். இதில் அதிர்ச்சித் தோல்வி என்றால் அது ஸ்மிருதியும், ராஜீவ் சந்திரசேகரமும்தான். அவர்களது தோல்வியை பாஜக எதிர்பார்க்கவில்லை. அதேபோல அர்ஜூன் முண்டாவும் தோற்றுப் போய் விட்டார்.




இந்த நிலையில் தற்போது 3வது முறை வரும் அமைச்சரவையில் புத்தம் புதியவர்கள் நிறையப் பேரை சேர்க்க பாஜக திட்டமிட்டுள்ளதாம். தேர்தலில் மயிரிழையில் வென்றவர்கள் அல்லது பெரும் பின்னடைவைச் சந்தித்தவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பில்லையாம். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர்கள், மக்களிடம் அதிகம் பேசப்பட்டவர்கள், ஆக்டிவாக செயல்படக் கூடியவர்கள், இளைஞர்கள் என வித்தியாசமான கலவையில் அமைச்சர்களைத் தேர்வு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாம்.


மேலும்  பிராந்திய பிரதிநிதித்துவத்தையும் இந்த முறை அதிகரிக்க திட்டமிட்டப்பட்டுள்ளதாம். ஜாதிகளுக்கும் உரிய முக்கியத்துவம் தரப்படுமாம். நிர்வாகத் திறமை கொண்டோருக்கும் முன்னுரிமை தரப்படுமாம்.


பல முக்கியத் தலைவர்கள் இந்த முறை தேர்தலில் தோல்வியுற்றுள்ளனர். அவர்களது திறமை மற்றும் முகக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி கொடுத்து அமைச்சராக்குவது அல்லது கட்சியில் முக்கியப் பதவி தருவது என்று திட்டமிடப்பட்டுள்ளதாம். ஸ்மிருதி இராணி ராஜ்யசபா எம்.பி ஆக்கப்படலாம் என்று சொல்கிறார்கள்.


தமிழ்நாட்டுக்கு வாய்ப்பிருக்கா?




தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியுற்றுள்ளது. அதேசமயம், எல். முருகன் ராஜ்யசபா எம்.பியாக உள்ளார். அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி தரப்படும் என்று  தெரிகிறது. இருப்பினும், வருகிற சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்தும், இந்த லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு நல்ல வாக்குகள் கிடைத்துள்ளதை மனதில் கொண்டும், ஒரு சில முக்கியத் தலைவர்களுக்கு அமைச்சர் பதவி தரப்படலாம் என்று தெரிகிறது.


அந்த வகையில் பார்த்தால் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை தமிழிசையை தமிழ்நாடு பாஜக தலைவராக்கும் திட்டம் இருந்தால் அவருக்குப் பதில் பொன் ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பளிக்கப்படலாம். 


கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு இந்த முறை நல்ல வாக்குகள் கிடைத்துள்ளதால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி தர பாஜக விரும்பக் கூடும். இதெல்லாம் நடக்குமா அல்லது தமிழ்நாட்டிலிருந்து எல். முருகனை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களை மாநிலத்திலேயே கட்சிப் பணியாற்ற கட்டளையிடுமா என்று தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இந்த முறை கூட்டணி ஆட்சி என்பதால் முழுமையாக ஐந்து ஆண்டுகளைக் கடந்தாக வேண்டிய கட்டாயத்திலும் பாஜக இருக்கிறது. பாதியிலேயே ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டால் அது பாஜகவின் இமேஜை மேலும் கெடுத்து விடும் என்பதால் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்யும் நிலையில் பாஜக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்