யாருங்க இவங்க?.. சசிகலா பக்கத்தில் நின்று.. அவர் பேசப் பேச.. டொய்ங் டொய்ங்னு தலையாட்டிய பெண்!

Jun 18, 2024,10:42 AM IST

சென்னை:   சசிகலா சீரியஸாக, கோபமாக, ஆவேசமாக, ஆதங்கத்தோடு பேசிக் கொண்டிருக்கும்போது அவருக்கு பின்னால் நின்று கொண்டு சிரித்தபடியும், கண்களை அசைத்தபடியும், விதம் விதமாக ரியாக்ஷன் கொடுத்த பெண் இப்போது வைரலாகி விட்டார். அவர் ஏற்கனவே இதுபோல தலையாட்டிய பழைய வீடியோவையும் சேர்த்து, கூடவே பாட்டுக்களையும் கோர்த்து சமூக வலைதளங்களில் மீம் மெட்டீரியல் ஆக்கி விட்டனர்.


ஒரிஜினலை விட சில நேரங்களில் அதை ரீகிரியேட் செய்யும்போது பாப்புலராகி விடும். ஒரிஜினலை விட அது பாப்புலராக மாறியிருக்கும். சந்திரமுகி படத்தில் என்ன கொடுமை சரவணன் என்ற வசனத்தை பிரபு பேசியிருப்பார். அது பிரபலமானது. ஆனால் பிரேம்ஜி வந்து என்ன கொடுமை சார் இது என்று ரீகிரியேட் செய்தது இன்று வரை உச்சத்தில் உள்ளது. என்ன கொடுமை என்றாலே அது பிரேம்ஜி என்று ஆகி விட்டது அந்த ரீ கிரியேஷன்.


இதேபோலதான் ரஜினிகாந்த் பேசிய வசனம் கெட்ட பய சார் இந்தக் காளி.. அதே வசனத்தை சந்தானம் பேசியதும் அது பாப்புலரானது. குறிப்பாக இந்தக் காலத்து ஜெனரேஷனுக்கு கெட்ட பய சார் காளி என்றாலே அது சந்தானம் வசனம் என்று சொல்லும் அளவுக்கு பாப்புலர்.


சமீபத்தில் கூட மாமன்னன் படத்தில் ஒரு சம்பவத்தை மக்கள் பார்த்தார்கள். கதைப்படி அந்தப் படத்தின் ஹீரோ வடிவேலுதான். அதுதான் பாராட்டவும் பட்டது. ஆனால் திடீரென ஒரு தலைகீழ் மாற்றமாக வில்லனாக நடித்த பஹத் பாசில் பயங்கரமாக பாப்புலராகி விட்டார். அவரது கேரக்டரையும், அவர் பேசிய வசனத்தையும், அவரது நடிப்பையும் வச்சுப் புகழ ஆரம்பித்து விட்டது சமூகம்..  காரணம், பஹத் பாசிலின் பெர்பார்மன்ஸ்.




இப்படி ஒரு சைட் பெர்பார்மன்ஸ் இப்போது மீண்டும் கலகலப்பைக் கூட்டியுள்ளது. இது நிஜத்தில் நடந்த சம்பவம்.. மறைந்த ஜெயலலிதாவின் உற்ற தோழியாக வலம் வந்தவர் சசிகலா. சமீப காலமாக அவர் மீண்டும் அரசியல் பேச ஆரம்பித்திருக்கிறார். நேற்று அவர் தனது உக்கிரமான முகத்தைக் காட்டினார். படு ஆவேசமாக பிரஸ் மீட்டில் பேசினா். திமுக அரசை கடுமையாக சாடினார். அதிமுகவில் நான் ரீ என்ட்ரி கொடுத்துட்டேன் என்று கூறினார். 


இதெல்லாம் மேட்டரே இல்லை.. என்னாயிப் போச்சுன்னா.. சசிகலா கோபமாக, ஆவேசமாக, ஆதங்கமாக, கடுப்பாக பேசிக் கொண்டிருக்கும்போது அவருக்கு அருகே நின்றிருந்த ஒரு பெண்மணி தலையை ஆட்டிபடியே இருந்தார். கிட்டத்தட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல இருந்தது அவர் தலையாட்டிய விதம். வெறுமனே தலையாட்டவில்லை.. சசிகலா பேச்சுக்கேற்றவாறு ரியாக்ஷன் கொடுத்துக் கொண்டே தலையாட்டினார். புருவத்தை உயர்த்துவது, நமட்டுச் சிரிப்பு சிரிப்பு, பாரேன் என்பது போல பெருமிதம் காட்டுவது என்று அவர் டக் டக்கென்று ரியாக்ஷன் காட்டியதைப் பார்த்து பலரும் ஆச்சரியமாகி விட்டனர். இந்த வீடியோதான் இப்போது சமூக வலைதளங்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளது.


இவர் இதற்கு முன்பும் கூட சசிகலா பேசும்போது தலையாட்டி தலையாட்டி ரியாக்ஷன் கொடுத்துள்ளார் போல. அதையும் இப்போது கொண்டு வந்து வைரலாக்கிக் கொண்டுள்ளனர். சும்மா சொல்லக் கூடாது.. செம க்யூட்டாக ரியாக்ஷன் கொடுக்கிறார் இந்தப் பெண்மணி. 


யாருங்க இந்தப் பெண்.. என்றுதான் இப்போது பலரும்  கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற சைடு பெர்பார்மர்களை பேட்டி எடுப்பதற்கென்றே 2 யூடியூப் சானல்கள் இருக்கே.. அதில் ஏதாவது ஒன்றில் இவர் சீக்கிரமே வந்து பேட்டி கொடுத்தாலும் கொடுப்பார்.. காத்திருப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்