சென்னை: சீகர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம் Extreme (எக்ஸ்டிரீம் ).
இம்மாதம் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு இயக்குநர் ஆர்.வி.உதயக்குமார் பேசியதாவது:

இந்தப்படம் பற்றி எந்த ஒரு விசயமும் தெரியாமல் தான் கலந்துகொண்டேன். டிரெய்லர் பார்த்த போது, நாம் நினைக்காத விசயத்தை எல்லாம் செய்கிறார்களே என மகிழ்ச்சியாக உள்ளது. டைட்டிலே வித்தியாசமாக உள்ளது. சீகர் பிக்சர்ஸ் நிறைய வெற்றியோடு பயணிக்க வேண்டுமென வாழ்த்துகிறேன். ரக்ஷிதா மஹாலட்சுமியின் ரசிகன் நான், கடந்த வாரம் ஒரு படம் பார்த்தேன், அருமையாக நடித்திருந்தார். இந்தப்படத்திலும் நன்றாக நடித்துள்ளார்.
அபி நட்சத்திரா அயலி மூலம் கலக்கியவர், இதிலும் நன்றாக நடித்துள்ளார். தொழில் நுட்ப கலைஞர்களும், மிக அற்புதமாக பணிபுரிந்துள்ளனர். இசை அருமை, ஒளிப்பதிவு நன்றாகக் காட்சிப்படுத்தியுள்ளார். தன் கணவரின் ஆசைக்குப் பின்புலமாக இருந்து படத்தைத் தயாரித்திருக்கும், தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள்.

எப்போதும் வெளியிலிருந்து, சினிமாக்காரர்களை கலாய்ப்பார்கள். ஆனால் நிஜத்தில் சினிமாக்காரர்களை விடக் கேவலமானவர்கள் இங்கு இருக்கிறார்கள். சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார் அதற்குள் அவரை கட்டம் கட்டி விமர்சிக்கிறார்கள். அவர் முதலில் அரசியல் செய்யட்டும் பின் விமர்சிக்கலாம்.
சினிமாவில் இருந்து நிறைய முதல்வர்கள் வந்துள்ளார்கள். சினிமாவிலிருந்து யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். இந்த நேரத்தில் சினிமாவுக்கு வந்திருக்கும் சீகர் பிக்சர்ஸுக்கு வாழ்த்துக்கள். இயக்குநருக்கு என் வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் என்றார் ஆர்.வி. உதயக்குமார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Good touch & bad touch மட்டுமல்ல.. பெண் பிள்ளைகளுக்கு வீரக் கலைகளும் அவசியம்!
கல்வி அவளின் அடையாளம்.. தன்னம்பிக்கை அவளின் ஆயுதம்!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன்.. நான் அரசியலையே தொழிலா பண்றவன்...கராத்தே பாபு பட டீசர் வெளியீடு!
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
வீட்டின் வாசலில் நின்றாலும்.. வானம் வரை நீளும் கனவுகள்!
கைகள் மெலிந்தாலும், கனவுகள் வலிமை கொண்டவை.. பெண் குழந்தைகள்!
{{comments.comment}}