விஜய் ஏன் இந்த முடிவெடுத்தாரு?.. தமிழ் சினிமாவுக்கு பெரிய நஷ்டம்.. திருப்பூர் சுப்ரமணியன்

Feb 02, 2024,05:04 PM IST
திருப்பூர்: நடிகர் விஜய் ஏன் சினிமாவை விட்டு விலகும்  முடிவெடுத்தாரு.. தமிழ் சினிமாவுக்கு இது பெரிய நஷ்டம் என தியேட்டர் உரிமையாளரும், தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்ரமணியன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் விஜய். இன்று  அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். முழுநேர அரசியலில் இறங்க உள்ளதால் சினிமாவை விட்டு இன்னும் 2 ஆண்டுகளில் விலக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல திரைத்துறையினரையும் கவலை அடையச் செய்துள்ளது.

இது குறித்து தியேட்டர் உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த  திருப்பூர் சுப்ரமணியன் கூறுகையில், விஜய் சினிமா விட்டு விலகுவது உண்மையிலேயே எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அவர் ஒரு பெரிய நடிகர். கலெக்சன் கிங்குனு கூட சொல்லலாம். அவர் திரைப்படத்திலிருந்து விலகுவது என்பது திரைப்படத்துறையை சேர்ந்த எங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் தான்.



அவருடைய முடிவை பொருத்தவரையில் நாம் தலையிடமுடியாது. இருந்தாலும் எங்களுடைய வாழ்த்துக்கள் அவ்வளவு தான். எம்ஜிஆர் பீக்கல இருக்குறப்பா தான் அரசியலுக்கு வந்தாரு. விஜயகாந்தும் பீக்குல இருக்குறப்ப தான் அரசியலுக்கு வந்தாங்க. அப்படி  இருக்கும் போது, டவுன் அப்ப எல்லாம் கிடையாது. அவங்க அவங்க மனநிலைய பொறுத்தது. அவரு அரசியலுக்கு வரணும்னு நினைச்சாரு வந்துட்டாரு. 

கடந்த 6,7 மாதமாக அவரு அரசியலுக்கு வர்றாரு வர்றாருன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க இப்ப வந்துட்டாரு. அரசியலுக்கு வந்ததுக்கு அப்பறமும் சினிமாவில நடிக்கலாம். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்ததுக்கு அப்பறம் 5 வருசம் சினிமாவில் நடிச்சாரு. எம்ஜிஆர் அரசியலில் இருக்கும் போது தான் உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல், இதயக்கனி என மெகாஹி படங்களில் நடித்தார். 

விஜய் ஏன் இந்த முடிவை எடுத்தாருனு தெரியலை, அரசியல்ல இருக்கும் போது படத்துல நடிக்கலாம். ஒன்னும் பிரச்சனை இல்லை என்றார் திருப்பூர் சுப்பிரமணியன்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்