சென்னை: அதிமுக.,வை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வருகிறார். இதையே தான் சசிகலா, டிடிவி தினகரன் என அனைவரும் கூறி வருகிறார்கள். அவ்வளவு ஏன், பாஜக.,வே இதைத் தான் வலியுறுத்தி வருகிறது. அதிமுக.,வில் அனைவரும் ஒன்றாக இருந்தால் தான் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஓட்டுக்களையும் சிந்தாமல் சிதறாமல் அள்ளி, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்பது தான் அனைவரின் கணக்கும்.
தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்ளும் படி ஓபிஎஸ் வெளிப்படையாக கேட்டும் இபிஎஸ் தரப்பும் கண்டுகொள்ளவில்லை. பாஜக.,வும் கண்டுகொள்ளவில்லை. இதை விவகாரத்தை மேலோட்டமாக பார்த்தால் பலருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மீது தான் கோபம் வரும். ஏன் இவர் இப்படி செய்கிறார்? அவரே தற்போது தேடி வரும் போது கட்சியில் சேர்த்துக் கொண்டால் தானே முக்குலத்தோர் ஓட்டுக்களை, தென் மாவட்ட ஓட்டுக்களை பெற முடியும்? தேர்தல் நேரத்திலா இவரது ஈகோ, பிடிவாதத்தை காட்ட வேண்டும் என பலர் நினைக்கலாம்.
ஆனால் உண்மை நிலவரம் என்ன, அதிமுக தரப்பு ஏன் ஓபிஎஸ்.,ஐ சேர்ப்பத பற்றி தற்போது பற்றி பரிசீலிக்கவில்லை என்பதற்கு ஆழமாக கவனித்தால் முக்கியமான 3 விஷயங்கள் தான் காரணமாக சொல்லப்படுகிறது.
ஓபிஎஸ், அதிமுக உரிமை மீட்பு குழு என்ற ஒன்றை ஆரம்பித்தார். புதிதாக கட்சி துவங்க போவதாக வேறு சொன்னார். இதை நம்பி பலரும் அவர் பின்னால் சென்றனர். ஆனால் தற்போது வரை அவர் தனிக்கட்சி துவக்கவில்லை. அதே போல் பல முறை மாநாடு நடத்த போவதாக அறிவித்து, கடைசி நேரத்தில் அதை ஒத்திவைப்பதாகவும் அறிவித்தார். இப்படி சொல்வதும் ஒன்றும், செய்வதும் ஒன்றுமாக இருப்பதால் ஓபிஎஸ் உடன் இருக்கும் பலரே அவர் மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம். எங்களுக்கு ஏதாவது செய்கிறீர்களா அல்லது நாங்கள் அதிமுக.,விற்கே திரும்பி செல்லட்டுமா? என வெளிப்படையாக கூட கேட்டு பார்த்து விட்டார்களாம். ஆனாலும் ஓபிஎஸ் இடம் இருந்து இதுவரை நம்பிக்கை தரும்படி எந்த பதிலும் வரவில்லையாம்.
ஓபிஎஸ் உடன் இருப்பவர்கள் இபிஎஸ் அழைத்தால் உடனடியாக வர தயாராக தான் இருக்கிறார்கள். 2022ம் ஆண்டே ஓபிஎஸ்.,க்கு இணை பொதுச் செயலாளர் பதவி தயாராக இருந்தது போல், இப்போதும் அவரின் ஆதரவாளர்கள் வந்தால், தேர்தல் வெற்றி ஒன்றே இலக்கு என்பதால் அவர்களை ஏற்றுக் கொள்வது தான் சரியான என்ற நிலைப்பாட்டை இபிஎஸ் எடுப்பது தான் சரியானதும் கூட. ஆனால் அதில் முக்கியமான 3 சிக்கல்கள் இருக்கிறதாம்.
அதாவது, ஓபிஎஸ் தரப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு என ஒரு பதவியை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக அதே பகுதியில் இபிஎஸ் தரப்பு அதிமுக.,வினர் ஒருவரும் அதே பதவியில் இருக்கிறார். இப்போது ஓபிஎஸ் தரப்பில் இருப்பவர்களை அதிமுக.,வில் இணைத்தால் அவர்களுக்கு என்ன பதவி கொடுப்பது என்ற சிக்கல் உள்ளது. அப்படி பதவி கொடுக்க வேண்டும் என்றால், தற்போது இருப்பவர்களுக்கு என்ன பதவி கொடுப்பது என்ற சிக்கலும் உள்ளது.
இரண்டாவதாக இருக்கும் பிரச்சனை, ஓபிஎஸ் சமீபத்தில் சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பலமுறை சந்தித்து விட்டு வந்தது. அதிமுக.,வின் எதிரி என சொல்லப்படும் திமுக உடன் கூட்டணி வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தும் அளவிற்கு சென்று விட்டார் ஓபிஎஸ். அதோடு நிற்காமல் தற்போது அதிமுக.,வை கடுமையாக விமர்சித்து வரும் விஜய்யுடன் பேசி வருவதாக தகவல் கசிந்துள்ளதால் ஓபிஎஸ் மீதான நம்பிக்கை போய் உள்ளது. இந்த சமயத்தில் அவரை மீண்டும் அதிமுக.,வில் சேர்த்தால் கட்சிக்குள் மீண்டும் குழப்பம் வர வாய்ப்புள்ளது. ஒருவேளை அவர் அதிமுக.,வுடன் இருந்து கொண்டு, திமுக.,விற்காக வேலை செய்வாரோ என்ற சந்தேகமும் வரும். இது அதிமுக.,வின் வெற்றியை கேள்விக்குறி ஆக்கி விடும்.
இவை எல்லாவற்றையும் விட மிட முக்கியமான பிரச்சனை ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள். கட்சியை ஒன்று சேர்க்க வேண்டும் என சொல்லும் ஓபிஎஸ், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கூட இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என கோர்ட்டிலும், தேர்தல் கமிஷனிலும் மனு அளித்துள்ளார். அதே போல் சுப்ரீம் கோர்ட் உள்ளிட்ட பல கோர்ட்களில் அதிமுக கட்சி தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் ஒன்றை கூட தற்போது வரை ஓபிஎஸ் தரப்பு வாபஸ் பெறவில்லை. இவர் ஒருவர் தொடர்ந்த வழக்குகளுக்காக பல கோடிகளை அதிமுக தற்போது வரை செலவிட்டு வருகிறது. கட்சியை கைப்பற்ற வேண்டும், சின்னத்தை முடக்க வேண்டும் என ஒரு பக்கம் வழக்கை நடத்திக் கொண்டு, மறுபக்கம் கட்சி ஒன்று சேர வேண்டும் என ஓபிஎஸ் பேசி வருவதால் தான் அதிமுக தரப்பு தற்போது வரை ஓபிஎஸ்.,ஐ கண்டு கொள்ளாமல் இருக்கிறதாம்.
அதனால் அதிமுக.,வில் டிடிவி தினகரனை மீண்டும் சேர்ப்பது பற்றி கேட்டதற்கு பதிலளித்த இபிஎஸ், காலம் கனியட்டும் என்றார். அதுவே ஓபிஎஸ்.,ஐ சேர்ப்பது பற்றி கேட்டதற்கு, காலம் கடந்து விட்டது என்றார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது...எந்தெந்த பொருட்களின் விலை குறையலாம்?
கிடுகிடு வென உயர்ந்து புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.640 உயர்வு!
ஓணம் வந்தல்லோ.. திருவோணம் வந்தல்லோ.. களை கட்டி வரும் கேரளத்து திருவிழா!
எப்போ தான் பாஸ் களத்துக்கு வருவீங்க?.. குமுறும் தவெக.,வினர்.. வேகம் காட்டுவாரா விஜய்?
"ஒவ்வொரு திருமணமும் சிறப்பானது".. கிரிஸில்டாவின் புகாருக்கு.. மாதம்பட்டி ரங்கராஜ் தந்த மறைமுக பதில்
அனிருத் இல்லாமல் இனி இயக்க மாட்டேன்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 03, 2025... மகிழ்ச்சி அதிகரிக்க போகும் ராசிகள்
செப். 5ம் தேதி மனம் திறந்து பேசுவேன்.. செங்கோட்டையன் திடீர் அறிவிப்பு..அதிமுகவில் மீண்டும் சலசலப்பு
ஒன்றிணையாத அதிமுக.. ஓபிஎஸ்ஸைக் கண்டுக்காத இபிஎஸ்.. மீண்டும் சேர்க்காததற்கு இது தான் காரணமா?
{{comments.comment}}