- கா.சா. ஷர்மிளா
ஹிஜ்ரி 1447 ஷாபான் மாதம் பிறை 29 புதன்கிழமை ஆங்கில மாதம் 18- 2 -2026 ஆம் தேதி அன்று மாலை ரமலான் மாத முதல் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து 19ம் தேதி முதல் அதாவது நேற்றிலிருந்து புனித ரமலான் நோன்பு தொடங்கியுள்ளது.
ரமலான் மாதத்தில் நோன்பு ஏன் கடைபிடிக்கப்படுகிறது?
முகமது நபி (ஸல்) மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் சென்ற( கி பி 622 )2ஆம் ஆண்டு முகமது நபிக்கு திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதத்தை நினைவு கூறும் வகையில் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது முஸ்லிம்களின் மீது கடமையாக்கப்பட்டது
நோன்பின் நோக்கம்
இந்த மாதம் முழுவதும் இறைவனை வணங்குவதும் திருக்குர்ஆன் ஓதுவதும் தான தர்மங்கள் செய்வதற்கும் அர்ப்பணிக்கப்படுகிறது ரமலான் நோன்பு என்பது இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதம் ஆன ரமலான் மாதத்தில் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் ஒரு மத நடைமுறையாகும்.
இஸ்லாத்தில் ரமலான் நோன்பு என்பது ஐந்து கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது
பொதுவாக 30 நாட்களும் கடைபிடிக்கப்படும் இந்த நோன்புகளில் விடியற்காலை ஸஹர் (விடியலுக்கு முன்பு அதிகாலையிலேயே காலை உணவை உண்பர் ) முதல் சூரிய அஸ்தமனம் இப்தியார்( மாலை ஆறு மணி மேல் நோன்பை திறப்பர்) வரை நோன்பு முடித்த பிறகு முகமது நபி காலத்தில் இருந்தே பேரிச்சம்பழம் சாப்பிடுவது பொதுவான தேர்வாக கருதப்படுகிறது
முஸ்லிம்கள் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ மாட்டார்கள் இஸ்லாத்தின் ஐந்து வேளை தொழுகை பக்தி மற்றும் சுய ஒழுக்கத்தின் செயலாக இதை பார்க்கப்படுகிறது
(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}