-ஸ்வர்ணலட்சுமி
விநாயகர் பற்றிய தகவல்களை இன்றும் காண்போம்.
"வி" என்றால் இதற்கு மேல் இல்லை என பொருள். "நாயகர்" என்றால் தலைவர் என பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்ற பொருள்பட "விநாயகர்" என்று பெயரிடப்பட்டது என்று கூறுவார்கள். விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் "பிள்ளை" என்ற பெயருடன் "ஆர்" என்ற பன்மை விகுதி பெற்று பிள்ளையார் என்று பெயர் பெற்றார் என்றும் கூறுவார்கள்.
நாம் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன் விநாயகர் வழிபாடு செய்து தொடங்கினால் சிறந்த பலனை தரும். விநாயகர் பெருமான் , பூதமாக,தேவராக,ஆணாக, பெண்ணாக, உயர்திணையாக, அஃறிணையாக எல்லாமாய் விளங்குபவர். விநாயகர் ஒரு கொம்பு, இரு பெரும் காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள்,ஐந்து கரங்கள், ஆறு எழுத்துக்கள் உடையவர் .
யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும்,,விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குபவர் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார். அகில உலகமும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கி உள்ளது என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு உணர்த்துகிறது.
அவருடைய உருவம் எதை உணர்த்துகிறது என்பதை பார்ப்போம்...
விநாயகர் கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும்,மோதகம் எழுதிய கை காத்தல் தொழிலையும்,அங்குசம் ஏந்திய கை அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கை மறைத்தல் தொழிலையும்,தந்தம் ஏந்திய கை அருளல் தொழிலையும் புரிகின்றன. விநாயகர் தன்னுடைய ஐந்து கரங்களால் ஐம்பெரும் தொழில்களை புரிந்து ஆன்மாக்களுக்கு அருள் புரிகின்றார்.
விநாயகருக்கு பிடித்தமானது -அருகம் புல். எளிதாக கிடைக்கக்கூடிய அருகம்புல் வைத்து விநாயகரை வழிபட பிறவிப் பிணி நீங்கும். இன்பம் பெருகும் என்பது ஐதீகம். மஞ்சள், வெல்லம் எருக்கம் வேர்,சந்தனம் புற்று மண்,சாணம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபாடு செய்தால் அனைத்து விதமான நலங்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.
"கா ணா பத்யம்" : விநாயகர் பெருமானை வழிபடும் முறைக்கு "காணா பத்யம்" என்று பெயர். விநாயகர் பிரணவ வடிவினர் ஆவார். புதன்கிழமைகளில் அருகம்புல் சாற்றி விநாயகரை வழிபடுவது சிறப்பு.
மகாபாரதத்தை வியாசர் சொல்ல சொல்ல விநாயகர் எழுதினார்.தன் தந்தத்தை உடைத்து எழுதியது அறிவிற்கு அவர் முக்கியத்துவம் தருவதை உணர்த்துகிறது. மூஷிக வாகனன் விநாயகர் -விநாயகருக்கு மூஷிகம் அதாவது எலி வாகனத்தைத் தவிர சிங்கம், யானை,குதிரை மயில், காளை ஆகியவையும் வாகனங்களாக இருக்கின்றன என்று கூறுவார்கள்.
வன்னி மர இலைகளால் விநாயகரை பூஜித்து வழிபட்டால் சனிபகவான் தோஷம் நெருங்காது என்று கூறுவார்கள். விநாயகர் என்ற சொல்லுக்கு இவரை விட மேலானவர் இல்லை என்பதை உணர்த்துகிறார். அனைத்து தெய்வங்களும் சிற்ப முறைப்படி செய்து வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல, மஞ்சள் அல்லது மண் ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் அந்த வடிவில் எழுந்தருளி அருள் புரிவார்.
வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார்.ஆனால், தென்னிந்தியாவில் அவருடைய கரங்களில் மோதகம் வைத்துக்கொண்டு உண்கிறார். ஜப்பான் நாட்டில் வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத் தழுவிக் கொண்டு கொண்டிருப்பது போல உருவம் கொண்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த இரு விநாயகர் களையும் வழிபட்டால் நீண்ட காலம் வாழலாம் என்று அங்கு நம்பப்படுகிறது.
முதன் முதலில் விநாயகருக்கு கொழுக்கட்டை நைவேத்தியமாக படைத்து வழிபட்டவர் வசிஷ்டரின் மனைவி அருந்ததி என்று கூறுவார்கள். நடனமிடம் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, இனிப்பு நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்து வந்தால் ஒருவர் தம் வாழ்நாளில் இழந்தவற்றை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.
இவ்வாறு விநாயகர் பெருமானின் அருமை பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்... மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!
திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!
கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!
Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?
விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது
சிறுநீரக கற்களைத் தடுக்கலாம்.. கவலைப்படாம.. இதைக் கொஞ்சம் பாலோ பண்ணிப் பாருங்க
இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.520 உயர்வு!
{{comments.comment}}