நவராத்திரி சிறப்புகள்: நவராத்திரியில் பொம்மை கொலு ஏன் வைக்கப்படுகிறது?

Sep 24, 2025,01:55 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


நவராத்திரி என்றாலே அழகழகாக வீடுகளில் வைக்கும் பொம்மை கொலு படிகளில்  வரிசையாக அலங்கரித்து வைத்து அம்பிகை வழிபடும் சிறப்பான பண்டிகை ஆகும். கொலு என்பதற்கு "அழகு" என்பதை குறிக்கிறது.இது உயிர்கள் எவ்வாறு தோன்றின என்பதை விளக்கும் குறியீடாகவும், அன்னை பராசக்தியின் மகிமையை போற்றும் விதமாகவும் வைக்கப்படுகிறது. "யாதுமாகி நின்றாய் காளி" என்று பராசக்தியை இந்த உலகமாக இருக்கிறாள் என்று பாரதியார் கூறியதை யாவரும் அறிந்ததே. புல்,பூண்டு, புழு மரம்,பசு,புலி,மனிதர் என்று எல்லாவித உயிர்களும் ஆக விளங்குகிறாள் அன்னை பராசக்தி. 


அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அன்னையே காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கமாகும். நவராத்திரி காலத்தில் வீடுகளில் படிகள் வைத்து அதாவது மூன்று,ஐந்து,ஏழு ஒன்பது, என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் கொலுப்படிகள் அமைத்து அழகாக மண்ணால் செய்யப்பட்டு வண்ணம் பூசப்பட்ட பொம்மைகளை அடுக்கி வைப்பது வழக்கம். கொலுவிற்கு "சிவை ஜோடிப்பு "என்றும் பெயர் உண்டு.


கொலு என்றால் அழகு மட்டுமல்ல உயிர்கள் தோன்றிய விதத்தையும், உலகின் பரிணாம வளர்ச்சியையும் காட்டும் வகையில் அமைக்கப்படுகிறது. இந்த பாரம்பரியம் பெரும்பாலும் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா,ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடக பகுதிகளில் மிகுதியாக கடைபிடிக்கப்படுகிறது.  நவராத்திரி காலத்தில் அம்பிகை அசுரனை வதம் செய்த நிகழ்ச்சியை கொலு வைத்து வீடுகளில் வழிபடுவது ஒரு முக்கிய அங்கமாகும்.




நவராத்திரி பொம்மை கொலுவில் "மரப்பாச்சி பொம்மை "முக்கிய இடம் வகிக்கிறது. இவை சந்தன மரம் அல்லது தேக்கு மரத்தினால்  செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் உருவ பொம்மைகள்.ஒவ்வொரு வருடமும் இந்த பொம்மைகளை புதுத் துணிகளை கொண்டு மணமகன், மணப்பெண ஒப்பனையில்   அலங்கரித்து பொம்மை கொலு படிகளில் வைப்பது வழக்கம்.தென்னிந்திய  திருமண சடங்கின் போது மரப்பாச்சி பொம்மைகளை தாய் வீட்டு  சீதனமாக கொடுக்கும் வழக்கம் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. இவ்வாறு சீராக கொடுக்கும்  பொம்மைகள் வழி வழியாக அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படுகிறது.


பெரும்பாலும் தென்னக கோவில்களில் கொலு வைக்கும் முறை பரவலாக நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரகார மண்டபத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி நோன்பினை முன்னிட்டு கொலு வைப்பது வழக்கம்.

 நவராத்திரி விழா பெண்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விழாவாகவும்,இந்த ஒன்பது நாட்களும் காலை, மாலை வேலைகளில் குத்து விளக்கு ஏற்றி, பல நிறக்  கோலமிட்டு,சக்தி தேவியின் ஸ்தோத்திர பாடல்களை பாடி,கொலு வைத்துள்ள வீட்டிற்கு உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டினர், நண்பர்கள் காலை, மாலை நேரங்களில் வருகை தந்து பக்தி பாடல்களை பாடுவதும்,புராணங்கள் வாசிப்பதும் மகிழ்ச்சிகரமான நிகழ்வாகும்.இவ்வாறு  தங்களுடைய மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர்  பகிர்ந்து கொள்கின்றனர்.


இவ்வாறு நவராத்திரி கொலு வைக்கும் வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவி இருக்கும். கொலு வைத்த வீட்டில் இருப்பவர்களுக்கு  மட்டுமல்லாமல் அந்த வீட்டிற்கு வருபவர்களுக்கும் நேர்மறை எண்ணங்களும், மகிழ்ச்சியும்,மன நிறைவும் பெற்று, வழிபாட்டிற்கு நைவேத்தியமாக வைத்துள்ள பிரசாதங்களை பெற்றுச் செல்வது மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி ஆகும். குழந்தைகளும் மகிழ்ச்சியாகவும், குதூகலமாகவும், புராணங்களை பற்றி அறிந்து கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.


"ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!" அன்னை பராசக்தியின்  அருளை அனைவரும் பெற்று நல்வாழ்வு  வாழ்வோமாக.மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வானத்தில் கார்மேகமாய் நீயே.. கண்ணா!!!

news

பெண் எனும் ஒளி சக்தி.. பெண் கல்வியின் மகாசக்தி.. சாவித்திரிபாய் புலே!

news

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி... எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? வானிலை மையம் தகவல்!

news

நவராத்திரி சிறப்புகள்: நவராத்திரியில் பொம்மை கொலு ஏன் வைக்கப்படுகிறது?

news

பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!

news

இன்று நவராத்திரி 3ம் நாள்...அம்பிகை வழிபாட்டிற்கான கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்

news

அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்தது... எவ்வளவு தெரியுமா?

news

தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?

அதிகம் பார்க்கும் செய்திகள்