கன்னியாகுமரி: தக்கலை அருகே கணவன் குடித்துவிட்டு தகராறு செய்து வந்ததால் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மனைவி, நேராக தனது கள்ளக்காதலுடன் சென்று அவருடன் குடும்பம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மஞ்சாடி பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் மதுரையை சேர்ந்த 20 வயது இளம் பெண்ணுக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் நடந்த இந்த இரண்டு வருடங்களில் கணவர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை துன்புறுத்தி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த இளம் பெண் தன் சொந்த ஊரான மதுரைக்கு போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து அந்த வாலிபர் மனைவியை மீண்டும் அழைத்து வர முடிவு செய்து மதுரைக்கு சென்று மனைவியை சமாதானப்படுத்தி தன்னுடன் ரயிலில் அழைத்து வந்துள்ளார். அப்போது அந்த வாலிபர் சற்று நேரம் கண்ணயர்ந்து தூங்கிவிட்டார். பின் கண் விழித்து பார்த்தபோது அருகில் இருந்த மனைவியும் குழந்தையும் காணவில்லை. அருகில் தேடியும் மனைவி கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் தக்கலை காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பெண்ணின் செல்போன் நம்பர் சிக்னலை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அந்தப் பெண் வெள்ளிச்சந்தையில் வசித்து வந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக வெள்ளிச்சந்தை பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கணவரிடம் கோபப்பட்டு மதுரைக்கு போவதாக கூறிய பெண் நாகர்கோவில் பஸ் நிலையம் வந்துள்ளார். அங்கு வெளிச்சந்தையில் வசித்து வந்த வாலிபர் ஒருவரை சந்தித்தார். இந்த சந்திப்பில் அந்தப் பெண் அந்த வாலிபரின் பேச்சுக்கு மயங்கி அவருடன் வாழ்வதற்கு முடிவு செய்தார். தொடர்ந்து வெள்ளிச் சந்தை பகுதிக்குச் சென்று கள்ளக்காதலுடன் குடும்பம் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அந்தப் பெண்ணிடம், கள்ளக் காதலனுடன் போக நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தார் .இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}