- அஸ்வின்
அனைவரும் சொல்வதை இவர் செய்து கொண்டே வருகிறார். செய்து காட்டி வருகிறார். பிப்ரவரி மாதம் தனது கட்சி பெயரை தமிழக வெற்றி கழகம் என்று அறிவித்த நடிகர் விஜய் தற்போது கட்சியின் கொடியை அறிவித்துவிட்டார். ஒரு கோலாகலமான அறிவிப்பு. கட்சி கொடிக்கு ஒரு பாடலையும் அறிவித்து விட்டார்கள். ஆளப்போறான் தமிழன் பாடலை எழுதிய விவேக் இந்தப் பாடலை எழுதியுள்ளார். ஒரு எளிமையை விஜய்யிடம் பார்க்க முடிகிறது. அதாவது பந்தாவாக சில பேர் சொல்லுவார்கள், மக்களுக்கு அது செய்ய வேண்டும், இது செய்ய வேண்டும். மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்று சொல்வதை அனைவரும் சொல்லிக் காட்டியபடியே இருப்பார்கள். ஆனால் இவர் சொல்வதை மட்டும் இல்லாமல் செயலிலும் காட்டி வருகிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் விஜய் மக்களோடு மக்களோடு அமர்ந்து, அந்தப் போராட்டத்தை ஆதரித்தார். தேவையான போது மக்களுக்காக குரல் கொடுக்க தவறியதில்லை. இந்த மாதிரி அனைத்து நிகழ்வுகளையும் நாம் சொல்லிக் கொண்டே போகலாம். நிகழ்வுகளை சொல்வது அவரது புகழை நாம் உயர்த்தி பேசுவது போலாகி விடும். எனவே நிகழ்வுகளை சுருக்கி விட்டு அவர் செயல்பாடுகளை நாம் உன்னிப்பாக கவனித்தோம் என்றால், அவரது நோக்கத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இவர் Man of words அல்ல, மாறாக man of action. அதாவது சொல்வதை விட செய்வதையே விரும்புபவர் விஜய்.
அவரது வாழ்க்கையை "திரையில்.. தரையில்" என்று குறிப்பிட விரும்புகிறேன். திரையில் அவர் பேசிய வசனம் அனைத்தும் தீபாவளிதான்.. அவர் ரசிகர்களுக்கு என்றும் சரவெடி. அது திரையில். ஆனால் மக்களிடம்.. அதாவது அவர் தரையில் இனிமேல் என்ன செய்யப் போகிறார். தரையில் என்று நான் குறிப்பிடுவது அவர் பேசிய பஞ்ச் வசனங்கள் எல்லாமே இனிமேல் அவர் செயலில் காட்டப் போகிறார். எல்லாருக்குமே குறிப்பாக பிரபலங்களுக்கு பொதுவாக ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் ஒரு யோசனை இருக்கும். நாம் இதை சொல்லனுமா, இதை சொன்னால் பின்விளைவுகள் என்ன வரும். நாம் இதை அணுகணுமா, இதை அணுகினால் பின் விளைவுகள் என்ன வரும் என்று எல்லாரும் யோசிப்பார்கள். ஆனால் இவர் சற்றும் யோசிக்காமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்து விடுகிறார். தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை பேசி விடுகிறார்.

திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களில் அவர் படத்தைப் பற்றி அதிகம் ரசிகர்களிடம் பகிர்வதை விட நல்ல பல கருத்துக்களை அழகாக பகிர்வார். Ignore the Negativity அப்படி அவர் சொல்வது பலருக்கும் பெரிய இன்ஸ்பிரேஷன் ஆகியுள்ளது. நாம் ரசித்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் ரசிப்பு தன்மையை உள்ளே வைத்துவிட்டு மக்களோடு இருந்து பார்த்தால் அவர் செய்வது எல்லாம் நன்றுதான். இப்போது அரசியல்வாதியாக விஜய்க்கு நிறைய சவால்கள் உள்ளன.
அவர் மக்கள் ஓட்டை பெற வேண்டும் என்றால் மக்களிடம் அதிகமாக நெருங்கிப் பழக வேண்டும். நெருங்கி பழகினால் தான் மக்களுக்கு அவரைப் பற்றி தெரியும், அவரது கொள்கை என்ன, அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய முடியும். அவர் மீது நம்பிக்கை வரும்.. ஒரு தலைவராக அப்போதுதான் அவர் உருவாக முடியும். இதெல்லாம் நடக்கும்போதுதான் அவரது கட்சிக்கும் அவரது கொடிக்கும் அவரது சின்னத்திற்கும் ஓட்டு போடுவார்கள்.
கொடி வந்துவிடலாம், சின்னம் வாங்கிவிடலாம். மக்களின் வாக்கை அவர் எப்படி சம்பாதிக்க போகிறார் என்பதுதான் அவருக்கு மக்கள் கொடுக்கும் சவால். அந்த சவாலை அவர் எப்படி சாதித்துக் காட்டப் போகிறார் என்று தான் அனைவரின் எதிர்பார்ப்பு. அதையும் அவர் சர்வ சாதாரணமாக கடந்து விடுவார் என்றால் அதை எப்படி அவர் தக்க வைக்க போகிறார் என்பது அடுத்த சவாலாக இருக்கும். வெற்றி அவருக்கு மட்டுமில்ல யாருக்கும் ஈஸியா கிடைச்சுராது. வெற்றி என்றது மிகப்பெரிய கோல்ட். அந்த கோல்ட் வேண்டுமென்றால் அவர் மட்டும் இல்லை எல்லாருமே மெனக்கிடனும்.
விஜய் இன்னும் அதிகமா மெனக்கெட்டா தான், மக்களோட வாக்குகளை அவர் வாங்க முடியும். ரசிகர்களின் அன்பையும், ஆதரவையும் ஏற்கனவே அவர் சம்பாதித்து விட்டார். அடுத்து மக்களோட அன்பை எப்படி சம்பாதிக்கப் போகிறார் என்பது சுவாரஸ்யமான எதிர்பார்ப்பாக உள்ளது. ஏன்னா அவர் படத்தில் எல்லாமே பண்ணிட்டார், எல்லாம் செஞ்சிட்டார். ஆனா நடைமுறை வாழ்க்கையில், பிராக்டிகலா என் செய்ய போறாரு. எப்படி பிரச்சாரம் பண்ண போறாரு. எப்படி மாநாடுகளை நடத்தப் போகிறார்.. அவரது அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.

மக்கள் விவாதிப்பார்கள், சில கருத்தை சிலாகிப்பார்கள். சில கருத்தை பொறுமையாக பேசுவார்கள். இதை அனைத்தையும் அவர் சமாளிக்க வேண்டும். அனைத்தையும் அவர் சாமர்த்தியமாக மேற்கொள்ள வேண்டும். சமயோசிதமாக அவர் நடந்து கொள்ள வேண்டும். பல சூத்திரங்களை அவர் கையாள வேண்டும். இது அனைத்தையும் அவர் செய்தால்தான் அவர் நினைத்ததை அவர் அடைய முடியும். 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து களம் இறங்கியுள்ளார் விஜய். நினைத்தது எல்லாத்தையும் அவர் அடைய வேண்டும் என்றால் மக்களின் அபிமானத்தைப் பெற வேண்டும். அதைச் செய்து விட்டால் வெற்றிதான். வாகை மலர்க் கொடியுடன் வந்துள்ள விஜய், வெற்றிவாகை சூடுவாரா என்பதை அறிய... அவரது பாணியில் சொல்வதானால்.. We are waiting!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}