சென்னை: தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் அஜீத் கலந்து கொள்வாரா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 விழா தொடர்பான அழைப்பிதழ் வைக்கும் பணியை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என். ராமசாமி தலைமையிலான குழு மேற்கொண்ண்டுள்ளது. முக்கியக் கலைஞர்களுக்கு அவர்களே நேரில் போய் அழைப்பு வைக்கிறார்கள்.
கமல்ஹாசனுக்கு அழைப்பு வைத்தார்கள். இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் ஆகியோர் விழா குழு சார்பில் நேரில் சென்று அழைத்துள்ளனர். நிச்சயம் வந்து கலந்து கொள்வதாக ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளாராம்.

இந்த நிலையில் நடிகர் அஜித், இந்த விழாவுக்கு அழைக்கப்படுவாரா? என்ற கேள்வி தற்பொழுது சமூக வலைதளங்களில் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தின் போது, திரைத் தொழிலாளர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். இதைப் பாராட்டும் வகையில், கடந்த 2010ம் ஆண்டு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற நிகழ்ச்சி திரையுலகம் சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் போது பேசிய அஜித்குமார் மேடையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். முதலில் கருணாநிதியைப் பாராட்டிப் பேசிய அவர் சமூக நிகழ்ச்சிகளுக்கு எங்களைப் போன்ற சினிமாவில் இருப்பவர்களை மிரட்டி வரவைக்கின்றனர். எங்களுக்கு அரசியல் வேண்டாம். யாரும் எங்களை கட்டாயப்படுத்த கூடாது என்று நீங்கள் தான் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று பகிரங்கமாகவே கருணாநிதிக்கு கோரிக்க வைத்தார் அஜீத். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அஜீத் பேச்சைக் கேட்டதும், ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார். அனைவரும் கருணாநிதியைப் பாராட்டிக்கொண்டிருந்த வேளையில் அஜித் இப்படி பேசியது அரங்கில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த பேச்சு பெரும் பரபரப்பாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அஜீத் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. அவரது படம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கே அவர் வருவதில்லை. அவரது படங்களுக்கு ஆடியோ வெளியீட்டு விழா கூட நடந்ததில்லை. தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவர் அவர்.
அஜீத்தை விடுங்க .. விஜய் வருவாரா?

இப்படிப்பட்ட நிலையில், கலைஞர் 100 விழாவிற்கு அஜித் அழைக்கப்படுவாரா.. அப்படியே அழைத்தாலும் அவர் வருவாரா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. அஜீத்தை விடுங்க.. முதல்ல விஜய் வருவாரா என்ற இன்னொரு கேள்வியும் எழுந்துள்ளது. அவரது லியோ பட வெளியீட்டுக்கு முன்னதாக ஆடியோ வெளியீட்டு விழா திட்டமிடப்பட்டிருந்தது. அதை தடுத்து விட்டதாக ஒரு குற்றச்சாட்டு அப்போதே கிளம்பியது. அதில் அரசியல் செய்து விட்டார்கள் என்றும் புகார் கிளம்பியது. சீமான் கூட அதுகுறித்துப் பேசியிருந்தார். எனவே விஜய் இந்த விழாவுக்கு வருவாரா என்ற கேள்வியும் கூடவே கிளம்பியுள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
சின்னசேலம் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஹைக்கூ திருவிழா
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
வெந்தயக் களி
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!
உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
4 மணிக்கு எழுவது எப்படி? அற்புத பலன்களை கொடுக்கும் அதிகாலை.. எளிதாக்கும் சிறந்த டிப்ஸ்
{{comments.comment}}