ஒட்டாவா: கனடாவின் அடுத்த பிரதமராக ஒரு தமிழ்ப் பெண் பதவியேற்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
கனடாவின் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்து விட்டார். இதையடுத்து அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரதமராக பலருடைய பெயர்கள் அடிபடுகின்றன. அதில் ஒருவர்தான் அனிதா ஆனந்த்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பிதான் அனிதா ஆனந்த். இவர் தற்போது ஜஸ்டின் அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக இருக்கிறார். இவரது பெயர் பிரதமர் பட்டியலில் முக்கியமாக அடிபடுகிறது.

2019ம் ஆண்டு முதல் முறையாக ஓக்வில்லியிலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அனிதா ஆனந்த். பொது சேவைத் துறை அமைச்சராக 2019 முதல் 21 வரை பதவி வகித்துள்ளார். தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அப்போது பல்வேறு வகையான சீர்திருத்தங்களை தனது துறையில் அமல்படுத்தி பலரது பாராட்டுக்களையும் பெற்றார். 2024 செப்டம்பர் மாதம் முதல் இவர் போக்குவரத்து அமைச்சராக இருந்து வருகிறார்.
அனிதா ஆனந்த்தின் தந்தையின் பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். அவரது பெற்றோர் சென்னையில் பிறந்தவர்கள். தாயார் பஞ்சாபைச் சேர்ந்தவர். அந்த வகையில் ஒரு தமிழச்சியாகவும், ஒரு பஞ்சாபியாகவும் வளர்ந்து வந்தவர் அனிதா. இந்த இரு இனமும் தனது இனம் என்று எப்போதுமே பெருமையாக அவர் சொல்வார். இதுகுறித்து ஒருமுறை அவர் கூறுகையில், நான் தமிழ், பஞ்சாபி என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்வேன். இரு பெரும் கலாச்சாரமும் மிகவும் பழமையானது, அழகானது. அப்படிப்பட்ட கலாச்சாரங்கள் என்னுடையது என்பதில் எனக்கு எப்போதுமே பெருமை உண்டு என்று பெருமிதத்தோடு கூறியுள்ளார் அனிதா ஆனந்த்.
அனிதா ஆனந்த் பிரதமர் பதவிக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. அப்படி நடந்தால், உலகின் 2வது பெரிய நாடான கனடாவின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமை அனிதாவுக்குக் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்...யார் அவர்கள்? பரபரக்கும் அரசியல் களம்
தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி
2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?
அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?
காலத்தால் கரைந்த காங்கிரஸ்.. பாஜகவை வெல்ல முடியாமல் தவிப்பது ஏன்?
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வயலா எலுமிச்சை.. எங்கள் ஊரின் பசுமை பொக்கிஷம்!
'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு
தேசத் தந்தை தேசத்தின் விந்தை .. நற்குணம்விற்ற நாட்டுச் சந்தை.. அகிம்சை தலைவன்!
{{comments.comment}}