பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என்ற யூகங்கள் வலுத்து வருகின்றன. இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கட்சி மேலிடம்தான் எதையும் முடிவு செய்யும். எனவே தேவையில்லாத சிக்கல்களை உருவாக்க வேண்டாம் என்று எச்சரித்தார்.
கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவி வகித்து வருகிறார். அவரை மாற்ற கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும், அக்டோபரில் முதல்வர் மாற்றம் நிகழும் என்றும் ஒரு செய்தி வலம் வருகிறது. இதுகுறித்து கார்கேவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, பாருங்கள், அது மேலிடத்தின் கைகளில் உள்ளது. மேலிடத்தில் என்ன நடக்கிறது என்பதை இங்கு யாரும் சொல்ல முடியாது. இது மேலிடத்திடம் விடப்பட்டுள்ளது, மேலும் மேலிடத்திற்கு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது. தேவையில்லாமல் யாரும் பிரச்சனை உருவாக்கக் கூடாது என்றார்.
2023 இல், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் தலா 2.5 ஆண்டுகள் சுழற்சி முறையில் முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வார்கள் என்ற ஊகங்கள் பரவலாக இருந்தன. இந்த ஏற்பாட்டை கட்சி இதுவரை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. தற்போது சித்தராமையா முதல்வராகவும், சிவக்குமார் துணை முதல்வராகவும் உள்ளனர்.

இந்த அடிப்படையில்தான் சித்தராமையா மாற்றப்படப் போவதாக செய்திகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல்வர் சித்தராமையாவின் மகனும் காங்கிரஸ் எம்.எல்.சி.யுமான யதீந்திரா சித்தராமையா, தலைமை மாற்ற வதந்திகளை உறுதியாக மறுத்து, தனது தந்தை முழு ஐந்து ஆண்டு காலமும் முதல்வராகப் பணியாற்றுவார் என்று கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய யதீந்திரா, சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் மற்றும் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் இருவரின் ஆதரவும் உறுதியாக உள்ளது. அரசு எந்தவித தடங்கலும் இல்லாமல் செயல்படுகிறது. மேலிடம் தலைமை மாற்றம் பற்றி பேசவும் இல்லை, அதற்கான எந்த அறிகுறியையும் கொடுக்கவும் இல்லை. என் தந்தை முழு ஐந்து ஆண்டுகளும் முதல்வராக இருப்பார் என்று அவர் கூறினார்.
பெண்ணுக்கு பேருதவி.. எது தெரியுமா?
எல்லாமே சக்தி (It's All About Energy)
தைப்பூசமும் வள்ளலாரும்.. உணர்த்தும் அருட் பெரும் செய்தி!
நீதி சொல்ல இத்தனை நூல்களா.. தமிழின் தனிப்பெருமை.. உங்களுக்குத் தெரியுமா?
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
{{comments.comment}}