எலன் மஸ்க்கின் புதிய திட்டம்.. தப்புமா டிவிட்டர்.. பரபர எதிர்பார்ப்பில் டிவீப்பிள்ஸ்!

Jul 17, 2023,03:48 PM IST
- சகாயதேவி

சென்னை:  சிறு தொழில் முனைவோராக இருந்தாலும் சரி பெரும் தொழிலதிபர்கள் என்றாலும் சரி, வியாபாரம் என்றால் ஏற்ற இறக்கம் இருக்கும். நாம் தினம் தோறும் பெரும்பாலான நேரத்தை கழிக்கும்,  ட்விட்டரும் இதற்கு விதிவிலக்கில்லை .

அதிக கடன் சுமை காரணமாக ட்விட்டரின் பணப்புழக்கம் எதிர்மறையாகவே உள்ளது என்று எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்திற்குள் ட்விட்டர் பணப்புழக்கத்தில் பாசிட்டிவ் அடையும்  என்று எலோன் மஸ்க் கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தார். ஆனால் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது.

செலவுக் குறைப்பு நடவடிக்கை:

கடந்த அக்டோபரில் எலோன் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியதில் இருந்து ஆக்ரோஷமான செலவுக் குறைப்பு என அதிரடி நடவடிக்கைகள் நிகழ்த்தினார். ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து பரபரப்பு ஏற்படுத்தினார். ஆட்குறைப்புக்கு பின்னர் கிளவுட் சர்வீஸ் பில்களை குறைத்த பிறகு, நிறுவனம் தனது கடன் அல்லாத செலவினங்களை 2023ல் $4.5 பில்லியனில் இருந்து $1.5 பில்லியனாகக் குறைத்ததாக மஸ்க் கூறினார்.

விளம்பர வருவாயில் 50% வீழ்ச்சியால்  ட்விட்டர் நிறுவனத்தின் வருவாய், 2021ல் 5.1 பில்லியன் டாலரில் இருந்து 2023ல் 3 பில்லியன் டாலராக குறைந்து போய் விட்டதாக மஸ்க் கூறியுள்ளார். இதை எப்படி முன்னேற்ற பாதையில் கொண்டு போவது என தீவிரமான யோசனையில் ஈடுபட்டுள்ள அவர் புதிய திட்டங்களை வகுக்க ஆரம்பித்துள்ளார்.

அடுத்தகட்ட நடவடிக்கை :

காம்காஸ்டின் என்பிசி யுனிவர்சலில் முன்னாள் விளம்பரத் தலைவரான லிண்டா யாக்காரினோவை சிஇஓவாக மஸ்க் பணியமர்த்தியது, சந்தா வருவாயை அதிகரிக்க ட்விட்டருக்கு விளம்பர விற்பனை முன்னுரிமை கிடைக்கும் என்பதை சமிக்ஞை செய்தது. 

யக்காரினோ ஜூன் தொடக்கத்தில் ட்விட்டரில் பணியாற்றத் தொடங்கினார். மேலும் முதலீட்டாளர்களிடம் ட்விட்டர் வீடியோ, படைப்பாளர் மற்றும் வர்த்தக கூட்டாண்மைகளில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அரசியல் மற்றும் பொழுதுபோக்கு நபர்கள், பணம் செலுத்துதல் சேவைகள் மற்றும் செய்தி மற்றும் ஊடக வெளியீட்டாளர்களுடன் ஆரம்ப பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் கூறினார். 

எலன் மாஸ்க் தீட்டிய புது திட்டம் ட்விட்டரை எந்த அளவுக்கு காப்பாற்றும், அதை முன்னேற்றும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்