டெல்லி: கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான Alphabet, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வேலை இழப்புகள் ஏற்படும் என்ற கவலைகளுக்கு மத்தியில் ஒரு ஹேப்பியான செய்தியை வெளியிட்டுள்ளது.
அதாவது, பொறியியல் பணியாளர்களை 2026 வரை தொடர்ந்து விரிவுபடுத்தும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு மனித திறமைக்கு மாற்றாக இல்லாமல், ஒரு ஊக்கியாக செயல்படும் என்றும், இதன் மூலம் புதிய தொழில்நுட்பத் துறைகளில் அதிக வாய்ப்புகளைப் பெற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் AI முதலீடுகளுக்காக ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில், கூகுளின் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

AI, பொறியாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் என்றும், மனிதர்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்த உதவும் என்றும் பிச்சை கூறியுள்ளார். எங்கள் தற்போதைய பொறியியல் தளத்திலிருந்து அடுத்த ஆண்டு வரை வளர்வோம் என்று எதிர்பார்க்கிறேன், ஏனெனில் இது வாய்ப்பு வெளியில் அதிகமாகச் செய்ய அனுமதிக்கிறது என்று சுந்தர் பிச்சை ப்ளூம்பெர்க்கிடம் தெரிவித்தார்.
கூகுள் நிறுவனத்தின் இந்த அணுகுமுறை, AI-ஐ செலவு குறைக்கும் கருவியாக பார்க்கும் நிறுவனங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்று சுந்தர் பிச்சை குறிப்பிட்டார். வேலைகளை நீக்குவதற்கு பதிலாக, AI பொறியாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் என்றும், மனித திறமையை அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் கண்டுபிடிப்புப் பணிகளுக்கு செலவிட அவகாசம் தரும் என்றும் அவர் விளக்கினார்.
வேமோ தன்னாட்சி வாகனங்கள், குவாண்டம் கம்ப்யூட்டிங் முயற்சிகள் மற்றும் யூடியூபின் உலகளாவிய வளர்ச்சி போன்ற விரிவாக்க முயற்சிகள் மனித நிபுணத்துவம் தேவைப்படும் கண்டுபிடிப்பு வாய்ப்புகளுக்கு சான்றாக உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக இந்தியாவில் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் சேனல்கள் உள்ளன, அதில் 15,000 சேனல்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளன, இது பொறியியல் திறமைக்கான தொடர்ச்சியான தேவையை எடுத்துக்காட்டுகிறது.
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!
{{comments.comment}}