4வது டெஸ்ட் போட்டி.. ஜெயிச்சே ஆகணும். கம்பீர் கையில் 3 மாற்றங்கள்.. சமன் செய்யுமா இந்தியா?

Jul 23, 2025,11:37 AM IST

மான்செஸ்டர்: இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் தொடங்குகிறது. இந்தத் தொடரை இங்கிலாந்து வென்று விட்டால் தொடரை வென்று விடும். எனவே அதைத் தடுத்து இந்தியா வென்று தொடரை சமன் செய்யுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளை இங்கிலாந்து வென்றுள்ளது. இந்த நிலையில் இன்று 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் தொடங்கவுள்ளது. இதில், இந்திய கிரிக்கெட் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


வேகப் பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் காயமடைந்துள்ளார். அவருக்குகப் பதிலாக புதிதாக ஒருவர் சேர்க்கப்படுவார்.  அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. 




தொடரில் இருந்து விலக்கப்பட்ட நிதீஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக மற்றொரு வீரரைத் தேர்வு செய்ய தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோருக்கு சவால் உள்ளது.


லீட்ஸ் போட்டியில் சொதப்பலாக விளையாடிய சாய் சுதர்சன் மீண்டும் அணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. லீட்ஸில் சாய் 3வது இடத்திலும், கருண் நாயர் கீழ்வரிசையிலும் களமிறங்கினர். ஆனால் 2வது மற்றும் 3வது டெஸ்டில் சாய் சுதர்சனுக்குப் பதிலாக கருண் நாயர் ஒன் டவுனாக களமிறக்கப்பட்டார்.


ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் அணிக்குள் வரவும் வாய்ப்புள்ளது. அவர் வேகபந்து வீசக் கூடியவர் என்பதால் அது அவருக்கு சாதகமாக உள்ளது.


செவ்வாய்க்கிழமை இந்திய அணியின் வலைப்பயிற்சி மழையால் பாதிக்கப்பட்டபோதிலும், சாய் சுதர்சன் அதிக நேரம் பயிற்சியில் ஈடுபட்டதால் அவர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. பிட்ச் மூடப்பட்டிருந்தபோதும், தமிழ்நாடு பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் நிழல் பயிற்சி மேற்கொண்டார் மற்றும் பிட்ச்சில் உள்ள பச்சை-பழுப்பு பகுதிகளை உன்னிப்பாகக் கவனித்தார்.


கருண் நாயரை மான்செஸ்டர் டெஸ்டில் இருந்து நீக்கும் வாய்ப்பு குறித்து இந்திய கேப்டன் ஷுப்மன் கில்லிடம் கேட்டபோது, அவர் அனுபவமிக்க பேட்ஸ்மேனைக் கைவிட மறுத்துவிட்டார். நாயர் பெரிய ஸ்கோர்களை எடுக்கவில்லை என்றாலும், நிர்வாகம் அவர் மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளது. இந்தத் தொடரில் இதுவரை அவர் 0, 20, 31, 26, 40, மற்றும் 14 ரன்கள் எடுத்துள்ளார்.


"கருண் நன்றாக பேட் செய்வதாக நாங்கள் நினைக்கிறோம். முதல் போட்டியில் அவர் தனது வழக்கமான இடத்தில் (6வது இடத்தில்) விளையாடவில்லை. இது போன்ற ஒரு தொடரில் ஒரு வீரர் மீண்டும் அணிக்கு வரும்போது கடினமாக இருக்கும். ஆனால் அவரது பேட்டிங்கில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. சில சமயங்களில் ஒரு 'க்ளிக்' நடப்பதுதான் முக்கியம். நீங்கள் ஒருமுறை 50 ரன்கள் எடுத்துவிட்டால், மீண்டும் உங்கள் நிலைமைக்கு வந்து பெரிய ரன்களை எடுக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக, அது அவருக்கு இதுவரை நடக்கவில்லை என்றுகில் கூறினார்.


யார் நீக்கப்படுவார்?


சாய் சுதர்சன் 4வது டெஸ்டில் ஒரு இடத்தைப் பெற்றால், அவர் எந்த வீரருக்குப் பதிலாக வருவார் என்று கணிப்பது கடினம். ஆனால், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் ஆல்-ரவுண்டர்கள் மீதான ஆர்வத்தைக் கருத்தில் கொண்டால், நிதீஷுக்குப் பதிலாக சாய் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை.


ஆகையால், கருண் நாயர் ஆடும் லெவனில் இடம் பெற முடியாமல் போகலாம். மற்றொரு வாய்ப்பு, வாஷிங்டன் சுந்தரை நீக்கிவிட்டு மற்றொரு பேட்ஸ்மேனைச் சேர்ப்பது. ஆனால் அது நடக்குமா என்றும் தெரியவில்லை.


இந்தியாவின் உத்தேச ஆடும் லெவன் இதுவாக இருக்கலாம்:


யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், கருண் நாயர், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர்/ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அன்ஷுல் கம்போஜ்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களே உஷார்... இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலைம மையம்!

news

குடியரசுத் துணைத் தலைவர் பதவி.. பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை நிறுத்த பாஜக திட்டம்?

news

மருத்துவமனையில் இருந்தபடியே.. கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

news

TNPSC குரூப் 4 தமிழ்ப் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்: அண்ணாமலை

news

தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் ரவி மோகனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!

news

Indoor and Outdoor plant.. மணி பிளான்ட்:.. மணி மணியா வளர்க்கலாம்.. அழகா இருக்கும்!

news

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: உரிமை மீட்க... தலைமுறை காக்க... இலட்சினையை வெளியிட்டது பாமக!

news

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... மதுரை ஆதினத்தை துன்புறுத்தக்கூடாது: அண்ணாமலை

news

வானில் ஒரு அதிசயம்.. ஆனால் வரும் ஆகஸ்ட் மாதம் இல்லையாம்.. 2027ல்தான் நடக்கப் போகுதாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்