என்னாது.. ரோஹித் சர்மாவுக்கு 50 கோடி சம்பளமா.. அதிர வைக்கும் லக்னோ அணியின் ஆஃபர்!

Aug 29, 2024,05:22 PM IST

மும்பை:  மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக வலம் வரும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை ரூ. 50 கோடி வரை கொடுத்து தன் பக்கம் இழுக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணி தயாராக இருப்பதாக ஒரு தகவல் பரவியுள்ளது.


இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார் ரோஹித் சர்மா. அதேசமயம், ஐபிஎல்லைப் பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு 5 முறை கோப்பையை வாங்கிக் கொடுத்தவர். கடந்த சீசனில் அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். ஹர்டிக் பான்ட்யா கேப்டனாக்கப்பட்டார். இதனால் ரோஹித் சர்மா ரசிகர்கள் கடும் அப்செட்டானார்கள்.




இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகள் இப்போதே கிளம்பி விட்டன. குறிப்பாக சில முக்கியமான வீரர்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதில் பலரும் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ரோஹித் சர்மாவை மிகப் பெரிய தொகைக்கு வாங்க லக்னோ அணி தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது ரூ. 50 கோடி வரை சம்பளம் கொடுக்க லக்னோ அணி ரெடியாக காத்திருக்கிறதாம். இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ரோஹித் சர்மாவை வாங்கி விட்டால் கப்பு நிச்சயம் என்று லக்னோ திடமாக நம்புகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழி நடத்தியவர் ரோஹித் சர்மாதான். அவரது தலைமையில்தான் ஐபிஎல் அணிகளிலேயே மிகவும் வலுவான அணியாக மும்பை இந்தியன்ஸ் இத்தனை காலமாக விளங்கி வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடும் டஃப் கொடுத்த ஒரே அணி மும்பைதான். அதற்குக் காரணம் ரோஹித் என்பதில் சந்தேகம் இல்லை.


இந்த நிலையில் இப்படி ஒரு செய்தி உலா வருவது குறித்து லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறுகையில், எந்தக் காரணமும் இல்லாமல் இந்த யூகங்கள் கொடி கட்டிப் பறக்கின்றன. ஒரு வேளை ரோஹித் சர்மா வருகிறார் என்றே வைத்துக் கொள்வோம், ஒரு வீரருக்காக மொத்த அணியின் சம்பளத்தில் பாதியை அவருக்குக் கொடுத்து விட்டு, மற்ற 22 பேரையும் எப்படி நிர்வகிப்பது?


எல்லா அணிகளுக்குமே ஒரு விருப்ப பட்டியல் இருக்கும். சில வீரர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். இந்த கேப்டன் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று விரும்புவோம்.  அது நமது தனிப்பட்ட விருப்பம். அதேசமயம், என்ன கையில் இருக்கிறதோ அதுதான் எதார்த்தம். நீங்கள் விரும்புவதையெல்லாம் பெற்று விட முடியாது இல்லையா.. அது அணிகளுக்கும் பொருந்தும். எல்லோருமே நமக்குக் கிடைத்து விட மாட்டார்கள் என்றார் கோயங்கா.


கோயங்கா சொல்வதை வைத்துப் பார்த்தால் இது வதந்தியாகவே தெரிகிறது. ஆனால் அரசியல் போலத்தான் விளையாட்டும்.. எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்