நாக்பூர்: அரசியல் தலைவர்கள் 75 வயதில் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியிருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அவர் பிரதமர் நரேந்திர மோடியை மனதில் வைத்தே இப்படிப் பேசியிருப்பதாக கருத்து எழுந்துள்ளது.
செப்டம்பர் மாதம் 75 வயதை எட்டவுள்ளார் பிரதமர் மோடி என்பது நினைவிருக்கலாம். ஏற்கனவே இதுகுறித்து பேச்சுக்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே இதுகுறித்த பேச்சுக்கள் கிளம்பி விட்டன என்பதும் நினைவிருக்கலாம்.
நாக்பூரில் நடந்த மொரோபந்த் பிங்களேயின் புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய பாகவத், நீங்கள் 75 வயதை அடையும்போது, வகிக்கும் பதவியிலிருந்து விலகி மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று அர்த்த. ஒருமுறை மொரோபந்த் பிங்ளே, 75 வயதுக்கு மேல் ஒரு சால்வையால் கவுரவிக்கப்பட்டால், நீங்கள் ஓய்வு பெற்று, மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று பொருள் என்று கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மொரோபந்த், தேசிய சேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தாலும், உரிய வயதில் கண்ணியமாக விலக வேண்டும் என்று நம்பினார் என்று கூறினார் மோகன் பாகவத்.
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்தப் பேச்சு பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பிரதமர் மோடி ஓய்வுத் திட்டத்தில் இருக்கிறாரா அல்லது அவர் ஓய்வு பெற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் மறைமுகமாக சொல்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து சிவசேனா (யுபிடி) ராஜ்யசபா உறுப்பினர் சஞ்சய் ராவத் கூறுகையில், எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் போன்ற தலைவர்களை 75 வயதைக் கடந்த பிறகு பிரதமர் மோடி கட்டாய ஓய்வு பெற வைத்தார். இப்போது அவர் தனக்கு அதே விதியை செயல்படுத்துவாரா என்று பார்ப்போம் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி கூறுகையில், வாய்ப்பே இல்லாமல் போதிப்பது எப்போதும் ஆபத்தானது. 75 வயது வரம்பை விதித்து, மார்கதர்ஷக் மண்டலுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டபோது, தற்போதைய ஆட்சிக்கு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்பது தெளிவாகிறது என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் 2023ம் ஆண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய கருத்தை நினைவு கூற வேண்டியுள்ளது. அப்போது அமித் ஷா கூறுகையில், பாஜகவின் அரசியலமைப்பில் ஓய்வு என்ற விதி இல்லை. மோடி 2029 வரை தொடர்ந்து வழிநடத்துவார். ஓய்வு வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!
என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்
அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு
ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!
தேனியில் விவசாயிகளுடன் இணைந்து ஆடு மாடு மேய்ப்பேன்.. சீமானின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!
அதிவேக இணையத்தில் ஜப்பான் புதிய உலக சாதனை.. இந்தியாவை விட 16 மில்லியன் மடங்கு அதிகம்!
ஆட்சித்திறனுக்காக நோபல் பரிசு தந்தால் அதை எனக்குத் தரலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி
{{comments.comment}}