- முனைவர் என்.பத்ரி
சென்னை- வேளச்சேரி பரங்கிமலைக்கு இடையே உள்ள புழுதிவாக்கம், உள்ளகரம் பகுதிகள் தென் சென்னையில் மிக வேகமாக வளர்ந்து வரும் மக்கள் குடியிருப்பு பகுதிகளாகும்.இதில்,ஆதம்பாக்கம் இரயில் நிலையம் சென்னையின் பறக்கும் இரயில் திட்ட வழித்தடத்தில் உள்ள ஒரு முக்கியமான இரயில் நிலையமாகும். பரங்கிமலையிலிருந்து சென்னை கடற்கரைக்கு வேளச்சேரி வழியாக செல்லும் வழித் தடத்தில் இரண்டாவது நிலையமாக இது இருக்கிறது.
இந்த நிலையத்தை கிராண்ட் தெற்கு டிரங்க் சாலை (ஜி. எஸ். டி/தே. நெ. 45) -அதிகாரிகள் பயிற்சி கழகம், நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள சந்திப்பிலிருந்து, நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையம், உள் வட்டச் சுற்றுச்சாலை, பரங்கிமலை-மேடவாக்கம் சாலை போன்ற பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களின் அன்றாடப் போக்குவரத்து வசதி மேன்மைப்பட மிகவும் நம்பியிருப்பது வெகு நாள் இவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த ஆதம்பாக்கம் இரயில்நிலையத்தைதான்.
மேலும், சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான 4.5 கி.மீ நீளப் பறக்கும் ரயில் (எம்.ஆர்.டி.எஸ்) வழித்தட விரிவாக்கப் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 14-ம் தேதி வேளச்சேரி வழியாக சென்னை கடற்கரைக்கு பரங்கிமலையிலிருந்து பயணிகளுக்கான இரயில் சேவை தொடங்கப்பட்டது.

இருப்பினும், இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் தண்டவாளம் மிகவும் வளைவாக அமைக்கப்பட்டிருப்பதாலும், ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே ஆபத்தான அதிக அளவு இடைவெளி நிலவுவதாலும் பயணிகள் ஏறி இறங்குவது பாதுகாப்பற்றதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
எனவே, இரயில்கள் கடந்த ஆறு மாதங்களாக இங்கு நின்று செல்லுவதில்லை. தற்போது ஆதம்பாக்கம் பகுதி மக்கள் அருகில் உள்ள புழுதிவாக்கம் அல்லது பரங்கிமலை ரயில் நிலையங்களுக்குச் சென்றுதான் ரயில் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை பறக்கும் இரயில் திட்ட வலையமைப்பின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தின் ஒரு பகுதியான இந்தத்தட வழியில் ஆதம்பாக்கம் நிலையப் பணிகள் திட்டம் தொடங்கி பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிந்தபாடில்லை.
இதற்கிடையில், வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப்பணி கடந்த 2008ம் ஆண்டு ரூ.495 கோடியில் தொடங்கப்பட்டது. தற்போது 18 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இத்திட்டத்தின் மதிப்பீடு பல கோடிகள் அதிகரித்திருத்திருக்கலாம். சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரங்கிமலை வரை இந்த வழியில் 167 தூண்கள் கட்டப்பட்டு மேம்பால பணிகள் நடந்து முடிந்தன. இதில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, மேம்பாலப் பணி 10 ஆண்டுகள்கிடப்பில் போடப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு இரயில்கள் இயங்கத் தொடங்கிய நிலையில் இங்கு கட்டப்பட்ட பாலம் ஒன்று கீழே இடிந்து விழுந்தது. அதன் காரணமாகவும் இத்திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வர மேலும் காலதாமதமானது. மக்களின் வரிப் பணத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்னும் பொது மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் வருவது சமூக ஆர்வலர்களுக்கு பெருத்த வேதனையை அளிக்கிறது.
தமிழக அரசும், மத்திய அரசும் மக்களின் இப்பிரச்னையில் தனிக் கவனம் செலுத்துவது நல்லது. இதன் காலதாமதத்தால் பொது மக்கள் தனது மாத வருமானத்தில் கணிசமான பகுதியை தமது அன்றாடப் பயணங்களுக்காகவே செலவு செய்ய வேண்டியுள்ளது.
பொதுத் தேர்தலுக்கு முன்பே பறக்கும் ரயில் பணி தொடங்கும் என பொது மக்களால் எதிர்பார்க்கப்பட்டது. சமூக ஊடகங்கள் இந்த ரயில் நிலையத்தை பார்வையிட்டு, பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டு மத்திய, மாநில அரசு ஒரு வெளிப்படையானஅறிக்கையை சமர்ப்பித்தால் பேருதவியாக இருக்கும். இப்பகுதி சட்ட மன்ற உறுப்பினர்களும்,மக்களவை உறுப்பினர்களும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளும் மக்களின் இப்பிரச்னைக்கு உடனடித் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.இல்லையெனில் வரும் தேர்தல்களில் வாக்களிக்கும் ஆர்வம் பொது மக்களுக்கு மேலும் குறையும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து ஆகும்.
இந்நிலையில், இந்த அதீதமான காலதாமதம் ஆதம்பாக்கம் இரயில் நிலையம் அடுத்த தலைமுறைக்குத்தான் பயன்பாட்டுக்கு வருமா?’ என்ற கேள்வியையும் இப்பகுதி மக்களிடையே எழுப்பியுள்ளது.
ஆதம்பாக்கம் இரயில் நிலையப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். ஆதம்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு இது உடனடி பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதே இப்பகுதி பொது மக்களின் உடனடி எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.. இரயில்வேத் துறையின் சுணக்கம் நீங்குமா? சுறு சுறுப்பாக இயங்குமா? பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான் பொது மக்களின் தலையெழுத்தா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
(டாக்டர். என். பத்ரி சுமார் 50 ஆண்டுகள் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியராகத் தொடங்கி, பள்ளித் தலைமை ஆசிரியர், கல்வியியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் எனப் பல தளங்களில் பணியாற்றி, தற்போது பொறியியல் கல்லூரியின் கௌரவ ஆங்கிலப் பேராசிரியராக விளங்குபவர். கல்வியியல் மற்றும் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம், 4 முதுகலை பட்டங்கள் பெற்ற இவர், 1997-98-இல் தேசிய NCERT விருதைப் பெற்றவர். அகில இந்திய வானொலிக் கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றி, கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் வழியாக வழிகாட்டியுள்ளார். 'மை இங்கிலீஷ் கற்றல் அகாடமி' (MELA) நிறுவனச் செயலாளரான இவர், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க உறுப்பினராகவும், புதுவை அரசின் சிறந்த கவிஞர் விருதைப் பெற்றவராகவும் திகழ்கிறார். 800-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 100 சிறுகதைகள் எழுதியுள்ளார். முதியோர் மற்றும் இளைஞர் நலனை மையமாகக் கொண்டு 'முதுமை ஒரு வரம்', 'வாய்ப்புகள் வெற்றிகள் ஆகட்டும்' உட்பட பல நூல்களைப் படைத்துள்ளார்)
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Short Story: மனைவியின் அருமை
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
{{comments.comment}}