- மஞ்சுளா தேவி
சென்னை: டிசம்பர் 12ஆம் தேதி ரஜினி பிறந்த நாள் வர உள்ள நிலையில் , பிறந்த நாள் அன்று சூப்பர் ஸ்டாரின் புது படத்தின் அப்டேட் குறித்து தகவல்கள் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மிச்சாங் புயலால் சென்னை மாநகரமே பேரழிவை சந்தித்துள்ளது. அதீத கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதும் நீரால் சூழப்பட்டது. பல்வேறு பகுதிகளில் நீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. ஒரு சில இடங்களில் இன்னும் நீர் வடியாமல் இருகின்றது . இதிலிருந்து சென்னையை முழுவதுமாக மீட்டெடுக்க தமிழக அரசு மீட்புப் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக பல்வேறு நிறுவனங்கள் நடிகர்கள்,நடிகைகள் மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் என பலரும் தங்களின் நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர். மேலும் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை நிவாரணத் தொகையாக வழங்கி உள்ளார்.
இந்த நிலையில் வரும் டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ள நிலையில், டிசம்பர் 12ஆம் தேதி இவருடைய பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எவ்வாறு இருக்கும் என தெரியவில்லை. சிலர் அவர் சென்னையில் இருக்க மாட்டார் என்று கூறுகின்றனர். ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் அன்று வெளிவர இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து கோடை விடுமுறையான ஏப்ரல் மாதத்தில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 170 ஆவது படமும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் 171 வது படம் வெளிவர உள்ளது. ரஜினி நடிக்கும் இரண்டு படங்களின் தலைப்புகள் குறித்து இது வரை தகவல்கள் தெரியவில்லை. தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மூன்று படங்கள் வெளிவர உள்ள நிலையில் ரஜினியின் பிறந்தநாள் அன்று இப்படத்தின் அப்டேட் குறித்து தகவல்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
{{comments.comment}}