வாய்க்கு வந்தபடி பரவும் வதந்திகள்.. மெளனம் கலைப்பாரா சிவகார்த்திகேயன்!

Oct 19, 2023,04:40 PM IST

- மீனா


சென்னை:  நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து இசையமைப்பாளர் டி. இம்மான் ஒரு பேட்டியில் பரபரப்பாக கூறப் போக.. அதை வைத்து பலரும் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டுள்ளனர். இந்த பிரச்சினைகளுக்கும், பரவும் தகவல்களுக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சிவகார்த்திகேயேன் மெளனம் கலைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அவரது நலம் விரும்பிகள் மத்தியில் எழுந்துள்ளது.


பிரபல இசை அமைப்பாளர் டி. இமான் யூடியூப் சேனல்  ஒன்றிற்கு அளித்த பேட்டியில்  சிவகார்த்திகேயன் குறித்து ஒரு கடும் குற்றச்சாட்டை கூறினார். சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்து விட்டதாகவும் அந்த துரோகத்தை வெளியே சொல்ல முடியாது என்றும் அந்த அளவிற்கு அது என் மனதை மிகவும் காயப்படுத்தி விட்டது என்றும் கூறியிருந்தார்.




சிவகார்த்திகேயன் மீதான இந்த குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில்  பரபரப்பான பேசும் பொருளாக மாறியது. டி இமானின்  முதல் மனைவியான மோனிகா இந்த விஷயம் குறித்து  ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் "சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டதாக இமான் கூறியது முழுக்க முழுக்க தவறு. சிவகார்த்திகேயன் எங்கள் குடும்ப நண்பர் மற்றும் நல்ல மனிதர். இமானுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் நல்ல நட்பு இருந்து வந்தது. நண்பன் என்ற முறையில்  எங்கள் குடும்பத்தின் மீதும் எப்பொழுதும் அவருக்கு அக்கறை இருந்தது. 


எங்கள் இருவருக்கும் இடையிலான விவாகரத்தை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் சமாதானம் பேசி எப்படியாவது சேர்த்து வைத்துவிடலாம் என்று முயற்சி செய்தார். ஏனென்றால் ஒரு குடும்பம் சிதறி போகக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் எங்களுக்காக பேசினார். விவாகரத்து விவகாரத்தில் சிவகார்த்திகேயன் இமானுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்பதினால் சிவகார்த்திகேயன் மீது இந்த குற்றசாற்றை அனாவசியமாக செலுத்தியுள்ளார். 




இமான், தான் திருமணம் செய்யப் போகும் பெண்ணை ரெடியாக வைத்துக் கொண்டுதான் என்னிடத்தில் விவாகரத்து கேட்டார். நான் விவாகரத்து கொடுக்கவில்லை என்றால் என் அப்பாவை கொன்று விடுவதாக மிரட்டினார். இவ்வாறு மிரட்டித்தான் என்னிடத்தில் இருந்து விவாகரத்து வாங்கினார்.


எங்கள் குடும்பத்திற்கு நல்லது செய்யப்போன சிவகார்த்திகேயன் மீது இப்படி வீணான பழியை இமான் சுமத்தியுள்ளார். தற்போது இமானுக்கு பட வாய்ப்புகள் இல்லாததினால் இந்த மாதிரி பிரச்சனைகளை கிளப்பி விட்டு அனைவரின் கவனத்தையும்  தன் பக்கம்  இழுப்பதற்கு  முயற்சி செய்கிறார். புது வாழ்க்கையில் அவருக்கு சந்தோஷம் இல்லாததினால் இப்படி தேவையில்லாமல் சிவகார்த்திகேயன் பெயரை கெடுத்துக் கொண்டிருக்கிறார். எங்களுக்கு நல்லது செய்ய நினைத்தவருக்கு இப்படி ஒரு சங்கடம் ஆகிவிட்டது என்பதற்காக நான் வருத்தப்படுகிறேன் என்று மோனிகா கூறியுள்ளார். 


இமானின் முதல் மனைவி மோனிகாவின்  பேட்டியும் வைரலாகி வருகிறது . இதெல்லாம் ஒருபுறம் இருக்க இமானின் குற்றச்சாற்றிற்கு ஆளான சிவகார்த்திகேயன் தன்னுடைய மௌனத்தை கலைத்து தன் பக்கம் உள்ள நியாயத்தை கூற வேண்டும் என்று அவரது ரசிகர்கள், நலம் விரும்பிகள் கோரிக்கை வைக்கிறார்கள்கள். காரணம், இமான் பேட்டியை வைத்து பலரும் வாய்க்கு வந்தபடி சமூக வலைதளங்களில் எழுதிக் கொண்டுள்ளனர். அவர்களே நேரில் போய்ப் பார்த்தது போல பலரும் இஷ்டத்திற்கு எழுதுகிறார்கள்.


இமான் கூறிய துரோகம் என்னவாக இருக்கும் என்று ஆளாளுக்கு ஒவ்வொரு காரணத்தையும் சொல்லி இதுவா இருக்குமோ அதுவா இருக்குமோ என்று சொல்லி கலங்கடித்து வருகிறார்கள். திரைத்துறையில் உள்ளவர்களின் பர்சனல் வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் பயில்வான் ரங்கநாதன் கூட தன்னுடைய பங்கிற்கு இதை வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்.




இப்படி ஆளாளுளுக்குப் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், உண்மையில் என்னதான் நடந்தது என்பதை சிவகார்த்திகேயனே முன்வந்து விளக்கினால்தான் நல்லது.. இல்லாவிட்டால் அவரது பெயருக்கு தேவையில்லாமல் கெட்ட பெயர்தான் ஏற்படும் என்று அவரது ரசிகர்கள் கருதுகிறார்கள்.


வெளியில் வருவாரா சிவகார்த்திகேயன்.. விளக்கம் தருவாரா?

சமீபத்திய செய்திகள்

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

news

பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?

news

கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக

news

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்

news

மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்