- J லீலாவதி
ஏற்றமும் இறக்கமும் உள்ளது வாழ்க்கை என
உணர்த்தியது பரமபதம்
கூட்டலையும் பெருக்கலையும் விளையாட்டாய்
கற்றுக் கொடுத்தது கிட்டிப்ல்
இலக்கையடைய சொல்லி கொடுத்தது தாயம்.
ஆக்கலும் அழித்தலும் நம்முள் உண்டு என
உணர்த்தியது ஏழு கல்
போராடு என பொட்டில் செதுக்கியது சதுரங்கம்
பொறுமையும் தனிமை நேரப் பெருமையும்
பெற்றுத் தந்தது கண்ணாமூச்சி

ஊனமாக இருந்தாலும் சாதிக்கனும் என
நெறி ஊட்டியது நொண்டி
இருக்கும் இடத்திலிருந்து இல்லாதவிடத்திலும்
நிரப்பும் குணம் பதித்தது பல்லாங்குழி
நண்பன் உயரம் போக
முதுகும் தோளும் குனிந்து பனிந்து நிற்க
சொல்லி கொடுத்தது பச்சை குதிரை
அதனால் தான் என்னவோ
அந்த காலத்தில் தற்கொலைகள் அவ்வளவாக இருந்ததில்லை.
உண்மைதானா?
(J லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
SIR 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!
சென்னையில் ஊதிய உயர்வு கோரி போராட்டம்: தூய்மைப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் கைது!
{{comments.comment}}