லியோ படத்துல.. திரிஷா "உசுருக்கு" ஆபத்தில்லையே??

Jul 31, 2023,10:39 AM IST
லியோ படத்தில் விஜய் ரசிகர்கள் ஒரு மாதிரியான எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் என்றால், திரிஷா ரசிகர்கள் வேறு மாதிரியான பீதியில் இருக்காங்க மக்களே.. அது என்ன பீதி என்று நீங்க நினைக்கலாம்.. காரணம் இருக்குங்க.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம்தான் லியோ. தளபதி விஜய், திரிஷா உள்பட ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம் குவிஞ்சுக் கிடக்கு இந்தப் படத்துல. படத்தோட மேக்கிங் வேற லெவல்ல இருக்குன்னு இன்சைட் டாக்ஸ் ஏற்கனவே வர ஆரம்பிச்சிருச்சு.



இதுவரை இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவில் வந்ததில்லை.. இனி இதுக்குப் பிறகு இதே மாதிரி ஏகப்பட்ட படம் வரும்னு இப்பவே வெறியேத்தற மாதிரியான தகவல்லாம் வர ஆரம்பிச்சிருச்சு. வழக்கமாக லோகேஷ் கனகராஜ் படங்கள்ள ஹீரோயின் ஒன்னு இருக்க மாட்டாங்க இல்லாட்டி செத்துப் போற மாதிரிதான் கதை இருக்கும்.

அவரோட முதல் படத்துல இருந்து  கடைசியா வந்த விக்ரம் வரைக்கும் இதே பேட்டர்ன்தான். அந்த வகையில் லியோவில் ஹீரோயின் கதி என்ன என்பதுதான் இப்போது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. குறிப்பாக திரிஷா ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமா இருக்காங்க.. பொன்னியின் செல்வன் மூலம் சூப்பரான ரீ என்ட்ரி கொடுத்தவர் திரிஷா.. எனவே திரிஷாவை லியோவில் எப்படி காட்டியிருப்பாங்க என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் விஜய்  -திரிஷா ஜோடிக்கு சூப்பராக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகும் என்பதால் ரசிகர்களின் ஆர்வம் பல மடங்கு அதிகமாகவே உள்ளது.



அப்படி இருக்கையில் லோகேஷ் கனகராஜ், திரிஷா கேரக்டரை உயிரோடு விட்டு வைப்பாரா அல்லது வழக்கம் போல காலி செய்து விடுவாரா என்ற பீதி ரசிகர்களுக்கு வருவது இயல்புதானே.. ஆனால் திரிஷா கேரக்டருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று  லோகேஷ் வட்டாரத் தகவல்கள் அடித்துக் கூறுகின்றன.. அப்பாடா அப்பச் சரி என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர் ரசிகர்கள்.

ஒரு படத்தைப் பார்த்து முடிப்பதற்குள் எப்படியெல்லாம் கவலைப்பட வேண்டியிருக்கு பாருங்க!

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்