சென்னை: வாணி போஜன்.. சின்னத்திரை மூலம் இல்லந்தோறும் பெண்களின் மனதில் தனி இடம் பிடித்த இளவரசி!
முதலில் சின்ன திரையில் தடம் பதித்த வாணி போஜன், ஒரே சீரியலில் இல்லத்தரசிகள் அனைவரின் மனதையும் கவர்ந்தார். பலருக்கும் வாணி போஜன் என்றால் கூட சற்று யோசிப்பார்கள்.. ஆனால் சத்யா என்றால் தான் டக்கென்று தெரியும். சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் தொடர் மூலம் மிகுந்த வரவேற்பை பெற்றவர் வாணி போஜன். மேலும் பல தொடர் கதைகளில் நடித்துள்ளார். சின்ன திரையின் நயன்தாரா என்றும் இவரை குறிப்பிட்டது உண்டு.. அந்த அளவுக்கு நடிப்பும், வசீகரமும் இணைந்தவர்.
பின்னர் திரைப்படங்களுக்கு மாறினார் வாணி போஜன். ஒரு இரவு, அதிகாரம் 79, மீக்கு மாத்ரமே செப்தா போன்ற தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தார். ஓ மை கடவுளே படத்தில் "மீரா" கதாபாத்திரம் மூலம் இளைஞர்களின் மனதையும் கொள்ளை அடித்தார்.
ஏர்லைன்சில் பணிப் பெண்ணாக, விண்வெளி தேவதையாக வலம் வந்த வாணி போஜன், தற்போது ரசிகர்கள் புடை சூழ திரையுலக தாரகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் ஷாக் கொடுத்தார்.
ஒரு கடை திறப்பு விழாவின்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது விஜய்யின் அரசியல் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அப்போது வாணி போஜன் கூறுகையில், தனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருக்கிறது என்று கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், செங்கலம் என்னும் வெப் தொடரில் நடித்தபோதே தனக்கு அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டதாகவும், தற்போதும் அரசியல் ஆர்வம் இருப்பதாகவும் கூறி தன் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்துள்ளார்.
விஜய் அவர்களின் அரசியல் வருகை பற்றிய கேள்விக்கு, வரவேற்கத்தக்கது என்றும், மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் . விஜய் அவர்களுக்கு தமிழக மக்கள் ஒரு முறை வாய்ப்பு கொடுத்து பார்க்க வேண்டும் என்றும் கூறினார் வாணி போஜன்.
ஆஹா இது வேற லெவலா இருக்கே.. விஜய் தீவிர அரசியலில் இறங்கும்போது வாணி போஜனும் அவரது கட்சியில் இணைந்து கலக்குவாரா என்ற பரபரப்பும் எதிர்பார்ப்பும் ஒரே சேர கிளம்பியுள்ளது. சீக்கிரமாகவே தலைவியா மாறிடுங்க மேடம்.. ரசிகர்கள் காத்திருக்காங்க!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}