சென்னை: தவெக தலைவர் விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது தொடர்ந்து சஸ்பென்ஸாகவே உள்ளது. அதை வைத்து ஏகப்பட்ட யூகங்களும், வலம் வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் புதிய தகவல் ஒன்று கச்சை கட்டிப் பறக்கிறது.
தவெக தலைவர் நடிகர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும், அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் சில தொகுதிகள் பலமாக அடிபடுகின்றன.
விஜய் தென் மாவட்டங்களில் ஒன்று அல்லது மேற்கு மாவட்டத்தில் அல்லது மத்திய மாவட்டத்தில் போட்டியிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது. வட மாவட்டத்தில் அவர் போட்டியிட வாய்ப்பு குறைவு என்று சொல்கிறார்கள். அந்த வகையில் விஜய் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் சில தொகுதிகள் இதோ.
மதுரை கிழக்கு

ஆகஸ்ட் 2025-ல் மதுரையில் நடைபெற்ற கூட்டங்களில், விஜய் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் பரவியது. மதுரையை அரசியல் திருப்புமுனை ஏற்படுத்தும் இடமாகக் கருதுவது தமிழக அரசியலில் ஒரு மரபு. எம்.ஜி.ஆர் காலம் தொட்டு இது தொடர்கிறது. மேலும், தென் தமிழகத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்க மதுரை பாதுகாப்பான இடமாக அவர் கருதலாம்.
திருச்சி கிழக்கு
இதேபோல சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் திருச்சி கிழக்கு தொகுதியையும் தவெக குறித்து வைத்திருப்பதாக ஒரு தகவல் உள்ளது. இங்கு விஜய்க்கு ஆதரவு அலை வீசுவதாகவும் சொல்கிறார்கள்.
அரியலூர்
விஜய் தனது கட்சியின் கொள்கைப் பாடலிலும், பேச்சுகளிலும் சோழர் கால வரலாறு மற்றும் தமிழ் அடையாளங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். எனவே, அரியலூரை அவர் தேர்வு செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
ஈரோடு
சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டார். அது குட்டி மாநாடு போல நடந்தது. விஜய்யும் வழக்கத்தை விட படு ஆவேசமாக அதில் பேசினார். அதிமுகவின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன் இப்போது விஜய்க்கு ஆதரவாக இருப்பதால், கொங்கு மண்டலத்தில் உள்ள ஒரு தொகுதியில் குறிப்பாக ஈரோட்டில் ஒரு தொகுதியில் விஜய் களம் இறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ராமநாதபுரம்

விஜய்யின் தந்தைக்கு ராமநாதபுரம் மாவட்டம்தான் பூர்வீகம். விஜய்யும், ராமேஸ்வரம் மீனவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். எனவே அந்த மாவட்டத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இதையெல்லாம் விட ஒரு சுவாரஸ்யமான தகவல் அனேகமாக இது வதந்தியாகத்தான் இருக்கக் கூடும்.. வலம் வருகிறது. அது என்ன தெரியுமா.. வி என்று ஆரம்பிக்கும் ஒரு தொகுதியில் அவர் போட்டியிடலாம் என்பதுதான் அது.
அதிலும், விக்கிரவாண்டி, விருத்தாசலம் என்று இரு தொகுதிகளைத்தான் முக்கியமாக சொல்கிறார்கள். விக்கிரவாண்டி மாநாட்டை இதற்கு காரணமாக காட்டுகிறார்கள். விருத்தாச்சலம் விஜயகாந்த் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஒருமுறை பேசுகையில், எந்தத் தொகுதியில் யார் நின்றாலும், என்னை வேட்பாளராகக் கருதி வாக்குக் கேளுங்கள் என்று தொண்டர்களிடம் கூறினார். அந்த வகையில் இப்போது விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது சுவாரஸ்யமான எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
கண்ணாடியே கண்ணாடியே.. A Conversation With Mirror!
விண்ணுக்கும் மண்ணுக்கும் பொதுவாய் பிறக்கும் மனிதன்.. ஜோதிடம் அறிவோமா?
விவசாயம் காப்போம் வளமாக வாழ்வோம்.. இயற்கை வழி நடப்போம்!
விதையால் ஆயுதம் செய்வோம்.. விவசாயிகள் தினத்தன்று இந்த உறுதியை எடுப்போம்!
பொங்கல் பரிசுடன் ரூ.5000 வழங்க வேண்டும்...எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை.. இன்று தங்கம் சரவனுக்கு ரூ.1,600 உயர்வு
National Farmer's Day.. உழவுக்கு வந்தனை செய்வோம்.. விவசாயிகளுக்கு சல்யூட் செய்வோம்!
அன்னை யசோதா பாலகனே.. பிருந்தாவன கோபாலனே!
உதயநிதியை முதல்வராக்குவதே திமுக.,வின் முக்கிய நோக்கம்...நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
{{comments.comment}}