லண்டன்: விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார் ஸ்பெயின் நாட்டின் கார்லஸ் அல்காரஸ். இதுவரை இல்லாத அளவுக்கு நீண்ட நேரம் நடந்த இறுதிப் போட்டியில் நோவாக் ஜோகோவிக்கை வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளார் அல்காரஸ்.
ஆடவர் விம்பிள்டன் ஒற்றையர் இறுதிப் போட்டி நேற்று விம்பிள்டனில் நடைபெற்றது. இதில் ஜோகோவிக்கும், அல்காரஸும் மோதினர். அல்காரஸ் இதுவரை ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் கூட வென்றதில்லை. ஆனால் இந்த விம்பிள்டன் தொடர் முழுவதும் அவரது ஆட்டம் பலரையும் கவர்ந்திழுத்தது. அந்த அளவுக்கு அட்டகாசமாக ஆடி வந்தார் அல்காரஸ்.
இறுதிப் போட்டி அனைவரும் எதிர்பார்த்தது போல சுலபமாக இல்லை. மாறாக இரு வீரர்களும் மாறி மாறி செட்களைக் கைப்பற்றிக் கொண்டே போனார்கள். ஜோகோவிக் தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார் என்றால் அல்காரஸ் தனது ஆவேசத்தையும், விடாமுயற்சியையும் போட்டுத் தாக்கினார். இறுதியில், 1-6, 7-6 (6), 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று புதிய விம்பிள்டன் சாம்பியன் ஆனார்.
இதுவரை நடந்த விம்பிள்டன் இறுதிப் போட்டிகளிலேயே மிகவும் நீண்ட நேரம் நடந்த போட்டி என்ற சாதனை 2019ம் ஆண்டு இதே ஜோகோவிக் மற்றும் ரோஜர் பெடரர் இடையிலான போட்டிக்குத்தான் இருந்து வந்தது. அந்தப் போட்டி 4 மணி நேரம் 57 நிமிடங்கள் நடந்தது. அடுத்த இடத்தில் 2008ம் ஆண்டு நடாலுக்கும், பெடரருக்கும் இடையிலான போட்டி 4 மணி நேரம் 48 நிமிடங்கள் நடந்தது. தற்போது இந்த வரிசையில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது அல்காரஸ் - ஜோகோவிக் இடையிலான போட்டி. இப்போட்டி 4 மணி நேரம் 43 நிமிடங்கள் நடந்தது.
ரபேல் நடால் வாழ்த்து
புதிய விம்பிள்டன் சாம்பியன் அல்காரஸுக்கு உலகம் முழுவதும் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன. பல முன்னணி வீரர்களும் அல்காரஸை வாழ்த்தி வருகின்றனர். முன்னாள் சாம்பியனும் சக ஸ்பெயின் வீரருமான ரபேல் நடால் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இன்று எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். நம்முடைய ஸ்பெயின் டென்னிஸ் முன்னோடி மனோலோ சான்டனா எங்கிருந்தாலும் அங்கிருந்தபடியே உங்களை வாழ்த்துவார், மகிழ்ச்சி அடைவார். இறுக அணைத்து புதிய சாம்பியனை வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் நடால்.
ஜஸ்ட் 20 வயதேயான அல்காரஸ் வெற்றி பெற்றதும் அப்படியே தரையில் விழுந்து தனது வெற்றியைக் கொண்டாடினார். இந்த வெற்றியைப் பெற அவர் உழைத்த கடுமையான உழைப்புக்கு பலன் கிடைத்தது ஒட்டுமொத்த மைதானத்தையும் உற்சாகத்தில் மூழ்கடித்தது.
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
{{comments.comment}}