மும்பை: ரீல்ஸ் பைத்தியம் நாட்டில் நாளுக்கு நாள் முற்றிக் கொண்டு வருகிறது. பல நேரங்களில் இந்த ரீல்ஸால் விபரதீங்கள் நடந்துள்ளன. ஆனாலும் மக்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. மகாராஷ்டிராவில் ரீல்ஸ் எடுக்கும்போது காரை ரிவர்ஸில் எடுத்த பெண் 300 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
என்ன கொடுமை என்றால் அந்தப் பெண் கார் ஓட்டப் பழகியுள்ளாராம். காரை ரிவர்ஸ் எடுப்பது எப்படி என்று பழகியுள்ளார். அதை அவரது நண்பர் ரீல்ஸ் எடுத்துள்ளார். அப்போதுதான் கார் 300 அடி பள்ளத்தில் போய் விழுந்துள்ளது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. அந்தப் பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அந்தப் பெண்ணின் பெயர் ஸ்வேதா தீபக் சுர்வாஸே. 23 வயதுதான் ஆகிறது. இவரும் இவரது நண்பர் சூரஜ் சஞ்சா முலே என்பவரும் அவுரங்காபாத்திலிருந்து, சுலிபஞ்சான் மலை என்ற சுற்றுலா தளத்திற்குப் போயுள்ளனர். நேற்று பிற்பகல் மலை உச்சியை அடைந்ததும், அங்கு தான் கார் ஓட்டுவது போல ரீல்ஸ் எடுக்க விரும்பியுள்ளார் ஸ்வேதா. அவருக்கு கார் ஓட்டத் தெரியாதாம்.
காரை மெதுவாக ரிவர்ஸ் எடுக்கிறேன். அதை நீ ரீல்ஸ் எடு என்று நண்பரிடம் சொல்லி விட்டு காரை ரிவர்ஸ் எடுத்துள்ளார். அப்போது பின்னால் இருந்த பள்ளத்தை சரியாக கவனிக்காமல் காரை பின்னோக்கி செலுத்த, கார் பள்ளத்தில் விழுந்தது. கார் பள்ளத்தை நோக்கிப் போவதைப் பார்த்த சூரஜ், ஸ்வேதாவை நோக்கி கிளட்ச்சைப் பிடி என்று பதட்டத்துடன் கத்தியுள்ளார். ஆனால் பதட்டத்தில் ஆக்சிலரேட்டரில் ஸ்வேதா காலை வைத்து விட்டது போல தெரிகிறது. கார் வேகமாக பின்னோக்கிப் போய் பள்ளத்தில் விழுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
சுலிபஞ்சான் மலைப் பகுதியானது ஒரு இயற்கை எழில் கொஞ்சும் மலை வாசஸ்தலம் ஆகும். இங்கு தத்தாத்ரேயா கோவில் உள்ளிட்ட இடங்கள் உள்ளன. மழைக்காலத்தில் இந்தப் பகுதியே பார்க்க ரம்மியமாக இருக்கும். இப்படிப்பட்ட இடத்திற்கு வந்து தேவையில்லாமல் ரீல்ஸ் எடுக்கப் போய் உயிரை விட்டுள்ளார் ஸ்வேதா.
என்னத்தை சொல்வது என்று தெரியவில்லை.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}