டெல்லி: டெல்லி மெட்ரோவின் அக்கப்போர்களைப் பற்றி ஒரு மெகா சீரியலே எடுக்கலாம் போல. அந்த அளவுக்கு அக்கப்போர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது.
நாட்டிலேயே அதிக சர்ச்சையான, பாதுகாப்பில்லாத மெட்ரோ ரயிலாக டெல்லி உருவாகி வருகிறது. அதிக அளவிலான சர்ச்சைகளுக்கும், சண்டைக் காட்சிகளுக்கும் டெல்லி மெட்ரோவில் பஞ்சமே கிடையாது. தினசரி ஏதாவது ஒரு அக்கப்போரை மக்கள் சந்தித்து வருகிறார்கள்.
அரை குறை உடையோடு நடனமாடுவது, ஆபாசமாக பேசி சண்டை போடுவது, ஆபாசமாக உடை அணிந்து வருவது, ரீல்ஸ் எடுப்பது என்று டெல்லி மெட்ரோ மீது ஏகப்பட்ட குறைபாடுகள் உள்ளன. இந்த நிலையில், இப்போது ஒரு புது சர்ச்சை அரங்கேறியுள்ளது. ஒரு பெண் மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார் ஏறி உள்ளே வந்ததும் உட்கார முயல்கிறார். ஆனால் சீட் இல்லை. ஒரே கூட்ட நெரிசல்.

ஒரு இளைஞரிடம் நீ எழுந்து எனக்கு இடம் கொடு என்கிறார். அதற்கு அந்த வாலிபர் மறுக்கிறார். அடுத்த நிமிடம் அவர் செய்த காரியம் அனைவரையும் அதிர வைத்தது. அதாவது டக்கென அந்த இளைஞரின் மடியில் போய் உட்கார்ந்து கொண்டார் இப்பெண். அந்தப் பெண்ணின் அதிரடியைப் பார்த்த அந்த இடத்தில் அமர்ந்திருந்த இன்னொரு நபர் எதுக்குடா வம்பு என்று எழுந்து கொள்கிறார். அதற்குப் பின்னர் அந்தப் பெண் வசதியாக உட்கார்ந்து கொள்கிறார்.
அத்தோடு நில்லாமல், கொஞ்சம் இடம் கொடுப்பதால் ஒன்றும் குறைந்து போய் விட மாட்டோம். இதனால் எனக்கு ஒன்றும் இல்லை. உங்களுக்குத்தான் நல்லது. பஸ்களில் இடம் தருவதில்லையா.. அது போலத்தான் இதுவும் என்றும் அவர் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருக்கிறார்.
இந்த செயல் டெல்லி மெட்ரோ மீது மேலும் ஒரு கறையாக அமைந்துள்ளது. இதுபோன்ற செயல்கள் பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கக் கூடும். டெல்லி மெட்ரோவும் காவல்துறையும் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களைத் தடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கூட்ட நெரிசல் சமயத்தில் பெண்களுக்கு இடம் தர வேண்டும் தான்.. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதை இந்தப் பெண் இப்படி அடாவடியாக பெற்றது அநாகரீகமானது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}