உலக மறு சுழற்சி தினம்: கழிவுகளைத் தவிர்ப்போம்.. தவிக்கும் பூமித் தாய்க்கு நிம்மதி கொடுப்போம்!

Mar 18, 2024,02:05 PM IST

இன்று உலக மறு சுழற்சி தினம்.. பூமியை அன்னை என்று சொல்வோம்.. எல்லாவற்றையும் சுமக்கும் நிலம் தாய்க்குச் சமம் என்பதால், பூமியைத் தாயாக பார்க்கிறோம்.


ஆனால் அந்தத் தாயால் எத்தனை சுமையைத்தான் தாங்க முடியும்.. அதை எத்தனை பேர் யோசித்திருப் பார்த்திருப்போம்..? இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் எல்லாவற்றையும் நாம் அழிப்பதில்தான் அக்கறை காட்டுகிறோமே தவிர.. அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது குறித்து பெரும்பாலும் யோசிப்பதே இல்லை.


இயற்கை அன்னை தந்திருக்கும் பொருள்களை பயன்படுத்தி பின் அதையே மறு உருவாக்கம் செய்வது குறித்த விழிப்புணர்வு இப்போது அதிகரித்து வருகிறது. பூமியின் பல கழிவுகளை மீண்டும் புத்துயிர் ஆக்கும் திட்டத்தை பலரும் கையில் எடுக்க ஆரம்பித்துள்ளனர். கரும்பின் கழிவிலிருந்து அதை காகிதங்களாக மாற்றிப் பயன்படுத்துகிறோம்.. அதேபோல செய்திதாள்களை ஊற வைத்து அதில் உள்ள அச்சு மையை பிரித்தெடுப்பர். பல இரசாயனங்கள் சேர்த்து காகித அட்டைகள் கவர்கள் என அதை மீண்டும் மறு உருவாக்கம் செய்கிறார்கள். 




அரசிற்கு இதன் மூலதனம் அதிகம் தான். இருப்பினும் இயற்கை பாதுகாப்பிற்காக இது  தேவையாக பார்க்கப்படுகிறது.  பூமிக்குக்  கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை அரசு தடை செய்துள்ளது. நடைமுறை வாழ்க்கையில் மறு சுழற்சி செய்த பல பொருள்களை நாம் பயன்படுத்துகிறோம். இன்று கடைகளில் விற்கும் துணிப்பை மற்றும் காகிதத்தால் ஆன துணிப்பைகளும் மறு சுழற்சி செய்யப்பட்டவைதான். 


பனைஓலை பெட்டி, பாக்கு மட்டை தட்டுகள், குடிக்க பயன்படுத்தபடும் டம்ளர்களும் இதில் அடங்கும். இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து சுற்றுபுற சூழலைக் காக்க மறு சுழற்சி செய்து மறுபடியும் பயன்படுத்தும் பொருட்களைத் தயாரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.


அலுமினிய கேன்கள், கார் பம்பர்கள், தானிய பெட்டிகள், முட்டை அட்டை பெட்டிகள், கண்ணாடி கொள்கலன்கள், சலவை சோப்பு பாட்டில்கள், மோட்டோ எண்ணெய், ஏன் இரும்பும் கூட மறு சுழற்சி பொருட்களில் அடங்கும்.  இரும்பை மறுசுழற்சி  செய்து, திரும்ப  திரும்ப பயன்படுத்த முடியும். புதுப் புது பொருள்களாக அது பரிமாணம் அடைகிறது.


சில தொழிற்சாலை  கழிவுகளை மீண்டும் மறு சுழற்சி செய்யப்படுகின்றன.  இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றால், குப்பை தொட்டிகள் மற்றும் எரியூட்டிகளுக்கு அனுப்பட்டும்  கழிவுகளின் அளவை இது குறைக்க முடியும். மரம், நீர் ஆகியவை கனிம இயற்கைவளங்களை பாதுகாக்கிறது. உள்நாட்டு பொருள் வளத்தை சரியாக, திரும்பத் திரும்ப பயன்படுத்துவதன் மூலம் பொருளாதார பாதுகாப்பை அதிகரிக்கிறது. சுற்றுசூழல் மாசுபடுவதை தடுக்கிறது. நாட்டில் மறு சுழற்சியானது...  உற்பத்தி துறைகளில் புதிய  வேலைகளை உருவாக்கிறது.


பூமியைப் பாதிக்கும் பொருட்களைத் தவிர்ப்போம். பூமிக்கு சுகாதாரமான பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்போம்.. மறு சுழற்சி பொருட்களை அதிகம் பயன்படுத்துவோம்.


கட்டுரை: சுஜித்ரா

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்