பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆண்கள் அணி இதுவரை ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட கப் அடிக்க முடியாமல் திணறிக் கொண்டுள்ள நிலையில், தைரியமா நம்பிக்கையா சாதுரியமாக விளையாடினா ஜம்முன்னு ஜெயிக்கலாம் என்று கப் அடித்து கலக்கியுள்ள மகளிர் ஆர்சிபி அணி சூப்பர் மோட்டிவேஷன் கொடுத்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் டி20 தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்காக ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் ஆர்வத்தில் எதிர்பார்த்து காத்துக் கிடப்பார்கள். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை, ராஜஸ்தான், மும்பை, ஹைதராபாத் என பல அணிகள் கப் அடித்துள்ளனர்.

ஆனால், ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டு 17 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பெங்களூர் அணி இதுவரை ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதில்லை. இத்தனைக்கும் இந்த அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. சூப்பரான வீரர்கள் அணியில் உள்ளனர். சிறப்பாக விளையாடக்கூடிய முன்னணி வீரர்கள் இருந்தும் தொடரை கைப்பற்ற முடியவில்லை. ஒவ்வொரு வருடமும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் இருந்து வரும் ஆர் சி பி ரசிகர்களுக்கு அது கனவாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் பெண்கள் அணிக்கும் ஐபிஎல் டி20 தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு 2வது தொடர் நடைபெற்றது. பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் இத்தொடர் முடிவடைந்தது. இறுதிப் போடடியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும், டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணியும் மோதின.

இதில் பெங்களூரு அணி அட்டகாசமாக விளையாடி டெல்லி அணியை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. பங்கேற்ற 2வது தொடரிலேயே கப் அடித்து விட்டார்கள் பெங்களூரு மகளிர். இந்த வெற்றியால் பெண்கள் அணிக்கு பலரின் பாராட்டுகள் குவிந்து வருகிறது. .ஆர் சி பி பெண்கள் அணியின் வெற்றி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்குத்தானே இத்தனை காலமாக காத்திருந்தோம் என்று பெண்கள் அணியின் வெற்றியை பெங்களூரு ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டுள்ளனர். மேலும் பெண்களின் இந்த வெற்றியானது, இது ஆர் சி பி ஆண்கள் அணிக்கும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது. பெண்கள் அணியின் வெற்றியை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு ஆண்கள் அணியும் சாதிக்க முடியும் என்பதை இது உருவாக்கியுள்ளது.

பெண்கள் அணியை தொடர்ந்து ஆண்கள் அணியும் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றுமா.. புதிய வரலாறு படைக்குமா.. பெண்கள் அணி கொடுத்துள்ள இந்த பூஸ்ட்டை ஆண்கள் அணி முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உற்சாகத்துடன் தொடரை வரவேற்க தயாராக உள்ளனர்.
எப்போதுமே ஆண்களை விட பெண்கள் அதிக தன்னம்பிக்கையும், மன வலிமையும், புத்திசாலித்தனமும், கடும் உழைப்பையும் கொண்டவர்கள்.. அதை இப்போது ஆர்சிபி மகளிரும் உண்மையாக்கியுள்ளனர்.. அவர்களுக்கு சற்றும் சளைக்காத திறமை படைத்த ஆடவர் அணியும், வரும் கோப்பையை வென்று அசத்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}