கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன விருத்திமான் சஹா.. ஐபிஎல்லுக்கும் பெரிய கும்பிடு.. மொத்தமாக ஓய்வு!

Nov 04, 2024,06:09 PM IST

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆன விருத்திமான் சஹா, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளிலும் ஆடப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார் சஹா.


தற்போது ரஞ்சிப் போட்டிகளில் ஆடி வருகிறார் சஹா. இதுவே தான் கலந்து கொள்ளும் கடைசி கிரிக்கெட் தொடர் என்று அவர் அறிவித்துள்ளார். கடந்த மாதம்தான் 40 வயதை எட்டினார் சஹா. இந்தியாவுக்காக இவர் பெரிய அளவில் விளையாடவில்லை, வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 40 டெஸ்ட் போட்டிகளிலும் 9 ஒருநாள் போட்டிகளிலும் மட்டுமே விளையாடியுள்ளார். யாருக்காவது காயம் என்றால்தான் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும். 




அதேசமயம், தோனி ஓய்வு பெற்ற பின்னர் இவருக்கு தொடர்ச்சியாக சில போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டிகளிலும் கூட இவர் சில சாதனைகளைச் செய்துள்ளார். இந்திய விக்கெட் கீப்பர்களிலேயே அதிக டெஸ்ட் சதம் அடித்த 2வது வீரராக தோனி, ரிஷாப் பந்த்துக்குக்கு அடுத்த இடத்தில் சஹா உள்ளார். 3 சதங்களை அவர் டெஸ்ட் போட்டிகளில் விளாசியுள்ளார்.


2021ம் ஆண்டு கடைசியாக தனது டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார் சஹா. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி அது. அந்தத் தொடரில் சஹா நன்றாகவே ஆடியிருந்தார். ஆனாலும் அவரது வயதை கருத்தில் கொண்டு படிப்படியாக அவரை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு கே.எஸ். பரத், ரிஷாப் பந்த் ஆகியோரை அதிகம் பயன்படுத்த அப்போதைய கோச் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் முடிவெடுத்ததால் சஹாவின் சகாப்தம் அப்படியே முடிவுக்கு வந்தது.


சஹா ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். 2008ம் ஆண்டு முதல் தொடர்ந்து விளையாடி வந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளில் விளையாடியயுள்ள சஹா, கடைசியாக விளையாடியது குஜராத் டைட்டன்ஸ் அணியில்தான். கடந்த   3 வருடமாக அதில் விளையாடி வந்த சஹாவை அந்த அணி தற்போது ரீட்டெயன் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் சஹா விளையாடப் போவதில்லை. தனது பெயரை அவர் வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்யவில்லை. இதனால் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லியுள்ளார் விருத்திமான் சஹா.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்