டெல்லி: எக்ஸ் தளத்தில் புதிய மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளார்கள். அதாவது நாம் யாருடைய போஸ்ட்டையாவது லைக் செய்தால் அதேசமயம், அது வெளியே தெரியக் கூடாது என்றால் அதை பிரைவேட் லைக் ஆக மாற்றிக் கொள்ளலாம். அப்படிச் செய்யும்போது நாம் செய்யும் லைக் வெளியில் தெரியாது.
இந்த லைக்கை மறைக்கும் வசதி ஏற்கனவே எக்ஸ் தளத்தின் ப்ரீமியம் சப்ஸ்கிரைபர்களுக்கு உள்ளது. தற்போது அனைவருக்குமே இதை டிஃபால்ட் ஆக்கி விட்டார்கள். இதனால் யாருக்காவது நீங்கள் லைக் கொடுத்தால் அது வெளியே தெரியாது. இதுகுறித்து எலான் மஸ்க் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில், நாம் யாருக்காவது லைக் செய்தால், அப்படி செய்ததற்காகவே, நாம் சிக்கலுக்குள்ளாகும் தர்மசங்கட நிலையைத் தவிர்க்க மக்களுக்கு இதுபோன்ற வசதி செய்து தர வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்புதான் இந்த மாற்றம் குறித்து எக்ஸ் தளத்தின் என்ஜீனியரிங் பிரிவு இயக்குநர் ஹபோய் வாங்க் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், பயனாளர்கள் பலரும், லைக் செய்த காரணத்தாலேயே டிரோல் செய்யப்படுவதும், அவர்களுக்கு எதிராக விஷமத்தனமான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதையும் நாங்கள் அறிந்தோம். இதை சரி செய்யவே இந்த புதிய மாற்றம் வந்துள்ளது. நாம் யாருடைய போஸ்ட்டை லைக் செய்தோம் என்பதை நாம் பார்க்க முடியும். அதேசமயம், நாம் லைக் செய்ததை மற்றவர்கள் பார்க்க முடியாது என்றார் அவர்.
டிவிட்டர் தளத்தை வாங்கியது முதலே பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார் எலான் மஸ்க். இது பல நேரங்களில் சர்ச்சையைக் கிளப்பினாலும் கூட அது பின்னர் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. இந்த நிலையில் இந்த லைக்கை மறைக்கும் வசதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனிமேல் சுதந்திரமாக நமக்குப் பிடித்த டிவீட்டுகளை லைக் செய்யலாம்.. நாம் லைக் செய்வதை யாராலும் பார்க்க முடியாது, தேவையில்லாத டிரோல்களையும் தவிர்க்கலாம்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}