டில்லி : ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதை கொண்டாடுவதற்காக பிரபல ஐடி நிறுவனம் எக்ஸ்பினோ தனது ஊழியர்களுக்கு இன்று விடுமுறை வழங்குவதாக அறிவித்துள்ளது.
உலகக்கோப்பை டு20 கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த சில வாரங்களாக நடந்து வந்தது. இதன் இறுதிப் போட்டி ஜூன் 29ம் தேதி நடைபெற்றது. விறுவிறுப்பான இறுதிப் போட்டியிலில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது. கிட்டதட்ட 17 ஆண்டு இடைவெளிக்கு பிறகு உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றி உள்ளது. இதற்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூருவில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனமான Xpheno, உலகக் கோப்பையில் இந்தியா பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக ஜூலை 01ம் தேதியான இன்று விடுமுறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் லிங்க்டுஇன் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், "வழக்கமாக மாதத்தின் முதல் நாள் கணக்கு முடிப்பது, சம்பளம் போடுவது என நாம் பிஸியாக இருப்போம். ஆனால் இந்திய அணி அளித்த மாபெரும் முயற்சி, உழைப்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நாளை விடுமுறை நாளாக அறிவிக்கிறோம். இது நமக்கு ஆச்சரியம் மட்டுமின்றி, இது ஸ்பெஷலான நாளாகும் ஆகும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டித் தொடர் ஜூன் 01ம் தேதி துவங்கி, ஜூன் 29ம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெற்றது. இதனை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகியன இணைந்து நடத்தின. பரபரப்பு, விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்த இந்த போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி வெற்றி பெற்று, உலகக் கோப்பையை கைப்பற்றியதற்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோ சாஃப்ட் சிஇஓ சத்ய நடெல்லா, பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா உள்ளிட்ட பல ஐடி நிறுவன தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதோடு பிசிசிஐ, இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. இந்த பிரம்மாண்ட வெற்றியை இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் என பலரும் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}