- க.யாஸ்மின் சிராஜூதீன்
அடிப்படை தேவை கூட
இங்கு முழுமை இல்லையே ....
துன்பத்தில் கொடியது
ஏழ்மையே...
தூக்கம் கூடதொலைந்து
போனதே....
சிறந்த ஆலோசனைகள் கூட
யாரும் ஏற்பதில்லையே ...
பிள்ளைகள் ஆசையெல்லாம் கனவுஆகுமே..
தினமும் உழைத்தால் உண்ணலாம்....
ஒய்வு என்பது இல்லையே...

ஒய்வு எடுத்தால் அடுப்பு உறங்குமே...
பசி நெருப்பு வயிற்றில் எரியுமே...
பணத்திற்கு தட்டுப்பாடு இருக்கலாம்....
நிம்மதி இங்கு குடியிருக்குமே...
குடும்பத்துடன் கொஞ்சி பேசி மகிழலாம்...
அன்பு ஒன்றே பெருஞ்செல்வமாய்
இருக்குமே....
மனது மிகவும் பெரிசுதான்...
கையில் காசு சிறிதுதான்...
ஏழ்மையின் அடிப்படை வரவுதான்....
கல்வி,வேலைவாய்ப்பு...என பாதிப்புதான்....
விடாமுயற்சி அதிகம் இருக்குது...
உழைப்பின் பலனை அடையுது...
பொருளாதாரம் அனைவரும் அடையனும்...
அடிப்படை தேவையை நிறைவு செய்யனும்....
உற்பத்தி தொழில்களைப் பெருக்கனும்....
உழவுத்தொழிலை தழைக்கச் செய்யனும்...
ஏழ்மை அதனைப் போக்கனும்
பகிர்ந்து அளித்துவாழனும்....!!!
உயர்வு தாழ்வு கருதாமல்
ஒற்றுமையோடு வாழனும்...!!!
உலக இன்பம் கானும்...!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
{{comments.comment}}