சென்னை: இந்த வருடத்தின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாகவும், இந்திய சினிமாவில் பிரமாண்டமான வெற்றிப் படமாகவும் புஷ்பா 2 மாறி உள்ளது. 6 நாட்களில் மட்டும் 1000 கோடி ரூபாய் தாண்டி வசூலில் சாதனை படைக்கும் நிலைக்குச் சென்றுள்ளது.
2021ம் ஆண்டு வெளிவந்த புஷ்பா படத்தின் தொடர்ச்சியாக தான் தற்பொழுது புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்துள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் புஷ்பா 2. இந்த படம் கடந்த 5ம் தேதி உலகம் முழுவதிலும் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. செம்மரக் கடத்தலை மையப்படுத்தி இந்த படத்தின் மையக்கரு அமைந்துள்ள நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் இப்படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸாகவே வந்து கொண்டு இருக்கின்றனர்.

புஷ்பா 2 முதல் நாள் மட்டும் ரூ.265 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இரண்டாவது நாளில் 449 கோடிகளும், 3வது நாளில் 621 கோடிகளும், 4வது நளில் 829 கோடிகளும், 5வது நாளில் 922 கோடிகளும் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வசூல் இந்திய சினிமாவில் வேறு எந்த படத்திற்கும் இல்லாத வசூலாகும். வேறு எந்த படத்திற்கும் இந்த அளவிற்கு வசூலிக்க வில்லை என்றே சொல்லலாம்.
முதல் நாளில் இருந்த இந்த படத்திற்கு வசூல் சாதனை ஒட்டுமொத்த இந்திய திரையுலகமுமே ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிவேகமாக 6 நாட்களில் 1000 கோடிகளை அள்ளிய படமாக புஷ்பா 2 இருந்து வருகிறது.
புஷ்பா 2 ஓடும் திரையரங்கங்களில் கூட்டமும் குறைந்த பாடில்லை என்பதால், விரைவில் இப்படம் 2000 கோடிகளை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா 2 படத்தின் வசூல், ஆர்ஆர்ஆர், கல்கி 2898AD,பாகுபலி, கேஜிஎஃப் ஆகிய படங்களின் வசூலினை விரைவில் முறியடித்து இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக உருவாகும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}