சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தேவையில்லாமல் வெளியில் அலைவதை மக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்று மட்டும் 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும், அந்த பகுதிகளில் வெப்ப அலைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க தமிழக அரசு சார்பாக குடிநீர் வழங்குதல், ஓஆர்எஸ் கரைசல் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியாளர்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியும் வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மே ஒன்று, இரண்டு ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீச கூடும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வந்த நிலையில், இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில் இன்று மட்டும் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், ஈரோடு,திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஆகிய 19 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும். அப்போது இப்பகுதிகளில் வெப்ப அலை வீச கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக வேலூரில் 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில் தமிழ்நாட்டில் மொத்தம் 20 இடங்களில் சதம் அடித்தது. இவ்வாறு அதிக அளவிலான ஊர்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது இதுவே முதல் முறையாகும். மேலும் மே மாதத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}