மஞ்சள் பூசணி விதைகள் .. ஆரோக்கிய நன்மை தரும் Yellow Pumpkin seeds

Jun 26, 2025,01:57 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


நம் உணவில் அதிகமாக சமையலில் பயன்படுத்தப்படும் பூசணிக்காய் மற்றும் அமாவாசை நாட்களிலும் ஹோட்டல்களில் வைக்கும் சாம்பார்  ,கூட்டு ,பொரியல் என்று வகை வகையாக சமைத்து சாப்பிடுவோம் இல்லையா ?...ஆனாலும் அதன் விதைகள் எவ்வளவு நன்மைகள் தருகின்றது என்பதை கட்டுரையில் காண்போம்...


மஞ்சள் பூசணி விதைகள் ஆரோக்கிய நன்மை தரும் yellow pumpkin seeds: பூசணி விதைகள் பலவிதமான உடல் நல நன்மைகளை கொண்டுள்ளது .இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. தூக்கம் மேம்படுகிறது. மற்றும் ப்ரோஸ்டேட் ஆரோக்கியத்திற்கு நல்லது.


பூசணி விதைகளின் 10 நன்மைகள் பற்றி காண்போமா ....       

    



1.பூசணி விதைகளில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை சீராக இயங்க உதவுகிறது.

2. பூசணி விதைகளில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது. இதய ஆரோக்கியத்தை  மேம்படுத்துகிறது.

3. பூசணி விதைகளில் உள்ள டிரிப்டோபான் (Tryptophan )  மற்றும் மெக்னீசியம் நல்ல தூக்கத்தை பெற உதவுகிறது. இரவில் ஒரு ஸ்பூன் வீதம் சாப்பிட நல்ல உறக்கம் வரும்.

4. எடை இழப்பு :உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் இதனில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதனால் வெஜிடபிள்  சாலடுகளில் சேர்த்து சாப்பிட அதிக நன்மை பயக்கும்.

5. கூந்தல் வளர்ச்சி : பூசணி விதைகளில் உள்ள ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் முடி வளர்ச்சியை அதிகமாக ஊக்குவிக்கின்றனர்.

6. சரும ஆரோக்கியம் : இதில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றன.

7. பூசணி விதைகளில் பாலி அண் சாச்சுரேட்டட்  கொழுப்பு, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து இருப்பதனால் இதய நோய் அபாயத்தை குறைக்கின்றன.

8. டயாபடீஸ் நோயாளிகளுக்கு: இதில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பண்புகள் உள்ளன. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது.

9. பூசணி விதையில் உள்ள துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு தினமும் ஒரு ஸ்பூன் வீதம் கொடுக்க நன்மை பயக்கும்.

10.எலும்பு ஆரோக்கியம்: பூசணி விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது .இது எலும்புகளின் வலிமைக்கு மிகவும் முக்கியமானது. எனவே எலும்பு வலுப்பெற இதனை உட்கொள்ளலாம்.


இப்படி பூசணி விதைகளின் 10 முக்கியமான நன்மைகளை பார்த்தோம் இல்லையா ?....  இப்பொழுது இதனை எப்படி? சாப்பிடலாம்... என்பதை பார்ப்போம்....


பூசணிக்காய் சமையலுக்கு பயன்படுத்திவிட்டு அதில் உள்ள விதைகளை நன்றாக காய வைத்து பச்சையாகவோ அல்லது லேசாக வறுத்து சாப்பிடலாம். தானியங்கள் அல்லது பிற உணவுகளில் அதாவது சத்து மாவு செய்யும் பொழுது அதில் சிறிது விதைகளை வறுத்து போட்டு மாவு செய்து சத்துமாவு கஞ்சியில் பயன்படுத்தலாம்.


பால் பாயாசம் ,சேமியா பாயாசம் ,ஜவ்வரிசி பாயாசம் செய்யும் பொழுது முந்திரி திராட்சையுடன் இதனை லேசாக நெய்யில் வறுத்து பாயாசத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். கேக் செய்யும் பொழுதும் ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுதும் அதனில் டிரை ஃப்ரூட்ஸ் நட்ஸ் உடன் இந்த பூசணி விதைகளை சேர்த்து சாப்பிடலாம்.


பல உணவுகளில் சுவை மற்றும் ஊட்டச்சத்தை அதிகரிக்க பூசணி விதைகளை பயன்படுத்தலாம் .தயிர், அல்லது ஓட்ஸ் மற்றும் சூப் செய்யும் பொழுது வறுத்து பொடி செய்து கலந்து சாப்பிடலாம்.


ஸ்மூதிகள் செய்யும்பொழுது பழங்களுடன் இதனை தண்ணீரில் ஊற வைத்து சேர்த்து மிக்ஸியில் அரைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.


இவ்வளவு நன்மை பயக்கிறது என்று  இதனை **அதிகமாக உட்கொள்ளக் கூடாது . "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் "எனவே எதையுமே அளவாக பயன்படுத்தினால் தானே நன்மை உண்டாகும். மேலும்  தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் ஆளுநர் வெளிநடப்பு.. மைக் ஆப் செய்யப்பட்டதாகவும் பரபரப்பு புகார்!

news

ஆளுநர் உரையை வாசிக்காமல் முரண்டு பிடிப்பது நல்லதல்ல.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி.வெளியேறியது ஏன்?.. ஆளுநர் மாளிகை விளக்கம்

news

ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் வழக்கில் உத்தரவு ஒத்திவைப்பு

news

பொறுப்பேற்றதும் திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி பேசிய பாஜக நிதின் நபின்

news

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசு... எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!

news

கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை...சபாநாயகர் அப்பாவு விளக்கம்

news

அம்பானி வீட்டு மின்சார கட்டணம் எவ்வளவு தெரியுமா? கேட்ட நீங்களே ஆசந்து போவீங்க!

news

யாருடன் கூட்டணி?...டிடிவி தினகரன் நாளை கட்சியினருடன் ஆலோசனை

அதிகம் பார்க்கும் செய்திகள்