சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு தொடர்ந்து திரைத் துறையினர், பல்துறைப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர்.
அவரது மறைவு குறித்து நடிகர் யோகிபாபு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ:
இன்றைக்கு நமது கேப்டன் புரட்சி தலைவர் விஜயகாந்த சார் நம்மள விட்டு பிரிஞ்சுட்டாரு. பிரிந்தாலும் அவரு பண்ணிய புண்ணியம், தான தருமங்கள் இந்த பூமியில் நிலைச்சு தான் இருக்கும். ஏன்னா அவ்வளவு நல்லது செய்திருக்காரு. நிறைய நல்ல விசயங்களை கத்துக் கொடுத்தாரு, ரொம்ப நல்லவர். நல்ல உள்ளம் படைத்தவர். அவருடைய இறுதி ஊர்வலத்தில் என்னால கலந்துக்க முடியல.
அவருடைய ரசிகர்களில் நானும் ஒருத்தன். சின்னவங்க பெரியவங்க என வயசு வித்தியாசம் பார்க்காம எல்லாரையும் மதிச்சவரு. தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.
தலைவாசல் விஜய்
முதலில் அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். விஜயகாந்த் சாதி மதமற்ற மனிதர். வந்தவர்களை சாப்பிட்டீங்களா என கேட்கும் மனிதர். மனிதனுக்கு உதவின்னா உடனே உதவி செய்யக்கூடியவர். நிறைய பேர் அவரை ஏமாத்தி இருக்காங்க. மத்தவங்களுக்கு சாப்பாடு குடுத்து சந்தேசப்பட்டவர். இப்படிப்பட்ட மனிதர்களை பார்க்க முடியாது. ரொம்ப ரொம்ப நல்ல மனிதர்ங்க அவர்.
சிங்கமுத்து
நல்ல மனிதநேய மிக்க மனிதர். அவரைப் போன்றவர் மீண்டும் வர முடியாது என நடிகர் சிங்கமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகை மீனா
விஜயகாந்த் சார் மீண்டு வந்துருவாருனு நினைத்தேன். இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவில்லை. கேப்டன்னு தான் எல்லாரும் கூப்பிடுவோம். லீடர் சிப் குவாலிட்டி அவருக்கு அதிகமாக இருக்கும். நல்ல உன்னதமான மனிதர். எல்லாரும் நல்லா சாப்பிடனும்னு நினைப்பவரு. ஒரு பெரிய சகாப்தத்தை இழந்திருக்கிறோம். ரொம்ப கடின உழைப்பாளி. எல்லா நடிகரு கிட்டயும் நல்ல அழகா பேசி பழகுவாரு. புரடக்சன் பாய் முதற்கொண்டு நல்லா பேசுவாரு. மனிதர்களை பார்த்து அவங்களுக்கு ஏத்த மாதிரி பேசுவாரு. ஒருத்தரோட கஷ்டத்த அவருக்குள்ள போயி பார்த்து தீர்த்து வைப்பார் என்று கூறியுள்ளார்.
நடிகை சுகன்யா
கேப்டன் விஜயகாந்த் மறைவு பெரிய இழப்பு. மிகவும் நல்ல குணம் படைத்தவர். விஜயகாந்த் படப்பிடிப்பின் போது அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். யாரிடமும் பாகுபாடு இல்லாமல் இருப்பவர் என நடிகை சுகன்யா உருக்கமாக பேசியுள்ளார்.
அண்ணா மன்னித்து விடுங்கள் - நடிகர் விஷால்
நடிகர் விஷால் இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் வெளிநாட்டில் உள்ளேன். மறைந்த விஜயகாந்த் அவர்களின் அருகில் இருக்க முடியவில்லை. என்னை மன்னிச்சுடுங்கண்ணா என்று கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா
என் நண்பன். சிறந்த கலைஞர் சிறந்த மனிதாபிமானி. அவர் வீட்டுக்கு சென்று சாப்பிடாமல் வர முடியாது. அவரின் மறைவு பெரிய இழப்பு. என்னால் நடந்து சென்று பார்க்க முடியவில்லை என்ற கவலை இருக்கிறது. திரைத்துறை, அரசியல் இரண்டிலும் விஜயகாந்த் வெற்றி கொடி நாட்டியவர் என புகழ்ந்து பேசியுள்ளார்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு
உதவிக்கரம் நீட்டுவதில் அவருக்கு நிகரானவர் யாருமே இல்லை. என் மீது அளவற்ற பாசம் உடையவர். வாழ்வில் வல்லவனே வசூலில் நல்லவனே தொடரட்டும் உன் தொண்டு வாழ்க நீ பல்லாண்டு. ஆரவாரம். ஆர்பாட்டம், ஆக்ரோசம்னா அது விஜயகாந்த் தான் என்று விஜயகாந்தை புகழ்ந்து கூறியுள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}