கோயம்புத்தூர்: பெண்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இருப்பினும் யாருக்கும் பெரிதாக காயம் ஏற்படவில்லை.
போலீஸ் அதிகாரிகளையும், பெண்களையும், சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக கூறி சவுக்கு சங்கர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீசார் இன்று காலை கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு வாகன மூலம் அழைத்துச் சென்றனர்.
போலீஸ் வாகனம் தாராபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளானது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த போலீஸார் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு மாற்று வாகனத்தில் மீண்டும் கோவைக்குப் பயணமானார்கள்.
கோவை கொண்டு செல்லப்பட்ட சவுக்கு சங்கரிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது. அதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}