சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும் குரூப் 1 தேர்வு தேதி குறித்த அறிவிப்பும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் 12.30 வரை குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. இன்று முதல் ஏப்ரல் 27ம் தேதி இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஏப்ரல் 2 முதல் 4ஆம் தேதி இரவு 11.59 வரை நேரம் அளிக்கப்பட்டுள்ளது.
90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு அட்டவணை டிஎன் பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். பணியிடங்களுக்கு முதல் நிலை, முதன்மை நேர்முக தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வு வரும் ஜூலை 13ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இத்தேர்வு குறித்த விபரங்களை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளங்களை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
தாய்!!!
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
{{comments.comment}}