- ஷீலா ராஜன்
சென்னை: கார்த்திகை மாதத்தில் விளக்கேற்றி தெய்வங்களை வழிபடுவது நம் பாரம்பரியங்களில் ஒன்று. அகல்விளக்குகளில் நல்லெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றுவோம். இது வழக்கம்.... இந்த வருடம் வானவில்லின் வண்ணங்களில் கார்த்திகை தீபம் ஏற்றி இல்லங்களை அலங்கரிக்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்

கண்ணாடி டம்ளர்கள் அல்லது கிண்ணங்கள்.
பாலிதீன் பை
கத்தரிக்கோல்
பலவித வண்ணங்களில் உள்ள கலர் பொடிகள்
சிறிதளவு எண்ணெய்
விளக்குத்திரி
எப்படி செய்யலாம்
கண்ணாடி கிண்ணங்களில் அல்லது டம்ளர்களில் தண்ணீரை நிரப்பி, அவற்றில் நமக்கு பிடித்தமான வண்ணங்களை கரைத்து ஊற்ற வேண்டும். நீரின் மேல் பகுதியில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு எண்ணெயை மட்டும் ஊற்றி விட வேண்டும்.
அதன்மேல் பாலித்தீன் பைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அவற்றின் நடுவில் ஊதுபத்தியால் சிறிய துளை இட்டு அதில் திரியை நுழைத்து கண்ணாடி பாத்திரங்களில் உள்ள வண்ண வண்ண நீரின் மேல் மிதக்க விட வேண்டும். இந்த வண்ண நீர் நிரம்பிய பாத்திரத்தை வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டு, பாத்திரங்களில் உள்ள நீர் அசைவது நின்ற பிறகுதான் திரியை மிதக்க விட வேண்டும்.
இதன் பிறகு திரியை பற்ற வையுங்கள் .....

உங்கள் வீடுகளில் எங்கெல்லாம் வைக்கத் தோன்றுகிறதோ அங்கெல்லாம் வைத்து வண்ண வண்ண நிறங்களில் கார்த்திகை தீபம் மின்னுவதை கண்டு ரசியுங்கள்.... இதற்கு முன்பு தேவைப்பட்ட அளவு எண்ணெயில் பத்தில் ஒரு மடங்கு எண்ணெய் மட்டுமே செலவு செய்தால் போதும் .. கொண்டாட்டத்துடன் , இப்போது சிக்கனமும் சேர்ந்து வந்து விட்டதா!
எப்பொழுதும் போல் இல்லாமல் இந்த வருடம் உங்கள் இல்லங்கள் இனிய வண்ணங்களாலும் தீபங்களாலும் நிறையட்டும்...
பின்குறிப்பு: கண்ணாடி பாத்திரங்களுக்கு பதிலாக வெள்ளை நிற பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் அடிப்பகுதியை கட் செய்து எடுத்தும் கூட இதற்குப் பயன்படுத்தலாம்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}