டெல்லி: ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவராக ஒய்எஸ்ஆர் சர்மிளாவை நியமித்துள்ளது காங்கிரஸ் மேலிடம். இதனால் அந்த மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு சரியான டஃப் கொடுக்க முடியும் என்று காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர், சர்மிளாவின் கூடப் பிறந்த அண்ணன் ஜெகன் மோகன் என்பதும், அவர்தான் ஆந்திர மாநில முதல்வராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநில முதல்வராக, காங்கிரஸ் தலைவராக இருந்தவர் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. விமான விபத்தில் அவர் உயிரிழந்ததும் அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி தனிக் கட்சி தொடங்கினார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை நிறுவி ஆந்திர மாநிலத்தில் ஆட்சியையும் பிடித்தார்.
அவருடன் ஆரம்பத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார் சர்மிளா. ஆனால் பின்னர் அண்ணனுடன் மனக்கசப்பு ஏற்படவே தனியாக பிரிந்து வந்தார். தெலங்கானாவில் தனிக் கட்சி ஆரம்பித்து நடத்தி வந்தார். ஆனால் அவரது கட்சியால் பெரிய அளவில் எதையும் சாதிக்க முடியவில்லை.
இந்த நிலையில் அங்கு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸுக்கு ஆதரவு தருவதாக அறிவித்தார். அவரது கட்சியும் தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தலுக்குப் பின்னர் கட்சியை காங்கிரஸுடன் இணைத்து விட்டார், அவரும் காங்கிரஸில் இணைந்தார்.
தற்போது சர்மிளாவை, ஆந்திரப் பிரதேச மாநில அரசியலுக்குள் இறக்கியுள்ளது காங்கிரஸ் மேலிடம். அவரை கட்சியின் ஆந்திர மாநில தலைவராக அறிவித்துள்ளது காங்கிரஸ். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தீவிரமாக களமாடி வருகிறது. மறுபக்கம் பாஜகவும் தன்னைப் பலப்படுத்திக் கொண்டு ஜெகன்மோகனை முடக்கிப் போட காத்திருக்கிறது. அக்கட்சியின் மாநிலத் தலைவராக சில மாதங்களுக்கு முன்புதான் மறைந்த என்டிஆரின் மகள் புரந்தேஸ்வரி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போதும் காங்கிரஸ் கட்சியும் ஜெகன் மோகனுக்கு எதிரான முஸ்தீபுகளுடன் களம் குதித்துள்ளது.
ஜெகன் மோகனின் சொந்த தங்கையே மாநில காங்கிரஸ் தலைவராக வந்திருப்பதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். கண்டிப்பாக ஜெகன் மோகனுக்கு இது பெரும் தர்மசங்கடமாக இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். சர்மிளாவும் போர்க்குணம் படைத்தவர்தான். அவரும் அதிரடி அரசியலில் ஈடுபடுவார் என்பதால் களம் படு சூடாகும் வாய்ப்புள்ளது.
சர்மிளாவுக்கு ஆதரவாக அவரது தாயாரும் களம் இறங்கலாம் என்று கருதப்படுகிறது. ராஜசேகர ரெட்டியின் பழைய ஆதரவாளர்கள், சர்மிளாவுக்கு ஆதரவாக திரும்பக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் அது ஜெகன்மோகனுக்கு பெரும் சிக்கலாக மாறும்.
சர்மிளாவின் தலைமையில் ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் எப்படி செயல்படப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.
இதற்கிடையே, இதுவரை ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வந்த ருத்ரரராஜு கிடுகு, காங்கிரஸ் மேலிட அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}