ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தரப் போவதாக ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான ஷர்மிளா அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அரசியல் செய்து வருவது போல தெலங்கானாவில் அவரது தங்கை ஷர்மிளா அரசியல் செய்து வருகிறார். ஒய்எஸ்ஆர் தெலங்கானா என்ற கட்சியை நடத்தி வரும் ஷர்மிளா, நடக்கப் போகும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் அணி சேர்ந்துள்ளார்.
வருகிற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் காங்கிரஸுக்கு ஆதரவு தரப் போவதாகவும் ஷர்மிளா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்து ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

தனது முடிவு குறித்து ஷர்மிளா கூறுகையில், எனது கட்சி வாக்குகள் பிரிவைத் தடுக்கும் வகையில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. வாக்குகள் பிரிந்தால் கே.சந்திரசேகர ராவுக்குத்தான் அது சாதகமாக போகும். எனவேதான் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
பிஆர்எஸ் கட்சி மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. அது முடிய வேண்டும். அதற்கு காங்கிரஸ் வலுவாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதை உறுதி செய்யவே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளோம். ஊழல் கறை படிந்த, மக்கள் விரோத பிஆர்எஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இந்த தியாகத்தை நாங்கள் செய்கிறோம் என்றார் ஷர்மிளா.
கடந்த 2021ம் ஆண்டுதான் ஷர்மிளா கட்சி தொடங்கினார். இதுவரை எந்தத் தேர்தலிலும் அவரது கட்சி போட்டியிட்டதில்லை. தனது கட்சி வளர்ச்சிக்காக அவர் 3800 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபயணமும் கூட மேற்கொண்டிருந்தார். மாநிலஅளவில் தீவிர சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்க பாடுபட்டார். ஆனால் தற்போதைய தேர்தலில் அவர் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருப்பது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}